விமானிகளின் தற்கொலையும், பலியான நூற்றுக்கணக்கான பயணிகளும்
டெல்லி: ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து கடந்த ஆண்டு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சம்பவத்தை நினைவூட்டுகிறது.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் இருந்து 150 பேருடன் ஜெர்மனியின் டுசல்டார்ப் நகருக்கு கிளம்பிய ஜெர்மன்விங்ஸ் நிறுவன ஏர்பஸ் ரக விமானம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
விசாரணையில் இது விபத்து அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

தற்கொலை
ஜெர்மனியைச் சேர்ந்த துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) தற்கொலை செய்ய விமானத்தை விபத்துக்குள்ளாக்கியது தெரிய வந்துள்ளது.

மனஅழுத்தம்
லுபிட்ஸ் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தான் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

எம்.ஹெச்.370
ஜெர்மன்விங்ஸ் விமான சம்பவம் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்கையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை நினைவுபடுத்துகிறது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

கேப்டன் அகமது
எம்.ஹெச். 370 விமானத்தின் கேப்டன் ஜாஹரி அகமது ஷாவின் குடும்ப வாழ்வில் பிரச்சனையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்டுவிட்டதாக கூறப்பட்டது.

ஆதாரம்
விமானிகள் வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கினர் என்பதை நிரூபிப்பது கடினம். 1999ம் ஆண்டு ஆண்டு எகிப்து விமானம் மற்றும் 2013ம் ஆண்டு மொசாம்பிக்கில் இருந்து அங்கோலா சென்ற விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணம் விமானிகள் தான் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை.

டெக்சாஸ்
2012ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு கிளம்பிய விமானம் ஒன்று டெக்சாஸில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் கேப்டன் வித்தியாசமாக நடந்து கொண்டதால் அவரை விமானி அறைக்கு வெளியே தள்ளி கதவை பூட்டினார் துணை விமானி. இறுதியில் பயணிகள் கேப்டனை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்தனர்.

வேலைப் பளு
விமானிகள் தற்கொலை முடிவை எடுக்க தனிப்பட்ட பிரச்சனைகள் தவிர்த்து வேலைப்பளுவும் காரணம் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications