மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு தடை – மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி: மதுபான விடுதிகளில் அழகிகளின் நடனத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து பதிலளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2005 ஆம் ஆண்டு மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உயர்தர ஹோட்டல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

விதிமீறல் சட்டம்:
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி மகாராஷ்டிர சட்டசபையில் மகாராஷ்டிர போலீஸ் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் விதிமுறைகள் அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை விதிகளை மீறுவதாக அமைந்து உள்ளது.
அழகிகள் நடனத்துக்குத் தடை:
எனவே, இந்த புதிய சட்டத்திற்கு முரண்பாடாக மட்டும் அல்லாமல், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் அழகிகள் நடனத்துக்கு தடை விதிப்பதால் இதை எதிர்த்து இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
5 ஆண்டுகள் சிறை:
அதில், தடையை மீறி செயல்பட்டால் குறைந்தது 3 மாதம் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையும், ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
உரிமம் ரத்து:
இது தவிர சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமத்தையும் ரத்து செய்ய இந்த புதிய சட்டம் வழிவகுக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அரசிடம் பதில் கேட்டு நோட்டீஸ்:
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாதயா, பி.சி.பாந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மகராஷ்டிர அரசு பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications