பிரதமர் பதவி வேண்டாம்... ராகுலை வழிநடத்துவேன்!- மன்மோகன்சிங் திடீர் அறிவிப்பு
டெல்லி: வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ராகுலுக்கு வழிகாட்டுவேன், பிரதமர் பதவியில் நான் நீடிக்க மாட்டேன் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
நடந்து கொண்டிருக்கும் 15-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதம் 30ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட இருக்கிறது.

தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. மன்மோகன்சிங் 2 முறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும், யார் பிரதமர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சி ஏற்கனவே தனது பிரதம வேட்பாளராக குஜராத் முதலர் நரேந்திர மோடியின் பெயரை அறிவித்து விட்டது. இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 17-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இதில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் வற்புறுத்தி வருகிறார்கள். இதற்காக கூட்டத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வரவும் திட்ட மிட்டு உள்ளனர்.
இதற்கிடையே, ராகுல்காந்திக்கு வழி விடும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பிரதமர் ஆக மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், பிரதமர் மன் மோகன்சிங்கும் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தால் நான் பிரதமர் ஆக மாட்டேன். எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்று சோனியாவிடம் மன்மோகன்சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ‘10 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடித்து விட்டேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. என்றாலும் கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்துவேன். ராகுல் காந்திக்கு வழிகாட்டியாக செயல்படுவேன்,' என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications