"எனக்கும் நிதீஷ்குமாருக்கும் இடையே சிண்டு முடிகிறார் மோடி... ஸ்கூல் பாய் போல் புகார் சொல்லும் லாலு
பாட்னா : பீகார் மக்களை திசை திருப்பி எனக்கும் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் இடையே சண்டையை மூட்டிவிட பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்வதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
எங்களை பிரிக்கும் மோடியின் முயற்சி பலிக்காது என்றும் லாலு பிரசாத் கூறியுள்ளார்.இதுபற்றி லாலு பிரசாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...

மோடி பீகார் மக்களை தவறாக வழிநடத்த பார்க்கிறார். ராஷ்ட்ரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் பீகாருக்கு எவ்வளவு நன்மைகளை செய்திருக்கிறது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் விமர்சித்துக் கொள்வோம். ஆனால் இதை மோடி பாராட்டுகிறார். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அவர் எங்களை பிரிக்க முயற்சி செய்கிறார் என்று.
ஆனால், இதற்கு பீகார் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். மோடி பீகாருக்கு எந்த சிறப்பு நிதியுதவியையும் கொடுக்கப் போவதில்லை. ஒவ்வொரு முறை அவர் இங்கு வரும்போதும் ஏதாவது ஒரு வாக்குறுதியை கொடுத்துவிட்டுத்தான் செல்கிறார். ஆனால், இதுவரை அதில் ஏதாவது ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றி இருக்கிறாரா என்றால் இல்லை.
இவ்வாறு லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலுவான கூட்டணியாக இணைந்து போட்டியிட உள்ளன.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications