Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'அவர் அமைச்சர் மட்டுமல்ல..அதுக்கும் மேல..' கிரண் ரிஜிஜூ கலக்கல் டான்ஸ்: பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

கஜலாங்: மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசம் சென்ற போது, அங்குள்ள கிராம மக்களுடன் அக்கிராமத்தின் பாரம்பரிய நடனத்தை ஆடினார். இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அமைச்சரின் நடன திறன் குறித்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் பாஜகவின் முகமாகத் திகழ்பவர் கிரண் ரிஜிஜூ. தனி பொறுப்புடன் கூடிய விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்த இவருக்கு, அமைச்சரவை விரிவாக்கதின் போது மத்திய அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டது.

வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அங்குள்ள மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

புதுசா வெளியான பகீர் ஆதாரம்.. சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் கொல்லப்பட்டாரா? கிளம்பிய கேள்வி\

அமைச்சர் கிரண் ரிஜிஜூ

அமைச்சர் கிரண் ரிஜிஜூ

இவர் சமீபத்தில் மத்திய அரசின் திட்டத்தைப் பார்வையிட அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்குத் திட்டப் பணிகளை ஆய்வு சென்ற அவர், கஜலாங் கிராமத்திற்குச் சென்றார். அப்பகுதியில் வசித்து வரும் சஜோலாங் இன மக்கள், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்றுள்ளனர். அப்போது கிரண் ரிஜிஜூவும் அவர்களுடன் சேர்ந்து கலக்கலான டான்ஸ் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கலக்கல் டான்ஸ்

கலக்கல் டான்ஸ்

சுமார் ஒரு நிமிடம் வரை இருக்கும் அந்த வீடியோவில் கேசுவலான உடையில் இருக்கும் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மேள தாளங்களுக்கு ஏற்ப பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களுக்கு அட்டகாசமாக நடனமாடினார். அமைச்சரின் டான்ஸை கண்ட அங்குக் கூடியிருந்த மக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது தொடர்பாக கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டரில், "விவேகானந்தா கேந்திரா வித்யாலயா திட்டங்களைப் பார்வையிட அழகிய கஜலாங் கிராமத்திற்கு நான் சென்றிருந்தேன்

வைரல் வீடியோ

விருந்தினர்கள் யார் தங்கள் கிராமத்திற்கு வந்தாலும் தரும் சஜோலாங் இன மக்கள் மகிழ்ச்சியுடன் இப்படி தான் வரவேற்பார்கள். இதுபோன்ற நாட்டுப்புறப் பாடல்களும் நடனங்களும் தான் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் முக்கியமானவை" என்று பதிவிட்டுள்ளார். கிரண் ரிஜிஜூ நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அமைச்சரின் டான்ஸ் திறனைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மோடி பாராட்டு

மோடி பாராட்டு

இந்நிலையில், அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் நடன திறமையைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நல்ல ஒரு டான்ஸரும் கூட! அருணாச்சலப் பிரதேசத்தின் துடிப்பான மற்றும் புகழ்பெற்ற கலாச்சாரத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். பிரமதரின் இந்த ட்வீட்டை பலரும் ரிட்வீட் செய்து வருகின்றனர்

அமைச்சர் கிரண் ரிஜிஜூ

அமைச்சர் கிரண் ரிஜிஜூ

அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாசல் மேற்கு தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமைச்சர்களில் இவரும் ஒருவர். மருத்துவம் தொடங்கி ஃபிட்னஸ் வரை பல்வேறு வீடியோக்களை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதற்காகவே சமூக வலைத்தளத்தில் அவருக்கென தனி ஃபாலோயர்ஸ் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன், இதேபோல அருணாச்சல பிரதேசத்திலுள்ள வீரர்களின் சாதனையைப் போற்றும் பாடலை பாடி, அந்த வீடியோவை கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதுவும் இணையதளங்களில் வைரலானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+