Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுசா வெளியான பகீர் ஆதாரம்.. சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் கொல்லப்பட்டாரா? கிளம்பிய கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் ராம்குமார் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துள்ளன.

2016ம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம் பெண் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது. இந்த கொலை சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார் ஜெயலலிதா.

இந்த நிலையில்தான், ஜூலை 1ம் தேதி, அப்போதைய நெல்லை மாவட்டமான செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்தது. கைது செய்தபோதே அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்ள முயற்சித்ததாக காவல்துறை தரப்பால் கூறப்பட்டது. இதனால் அவரது கழுத்தில் கட்டு போடப்பட்டது. மீடியாக்களிடம் அவரால் பேச முடியவில்லை.

 ஒரு தலை காதல் என காரணம் கூறினர்

ஒரு தலை காதல் என காரணம் கூறினர்

ராம்குமார் ஸ்வாதியை ஒரு தலையாக காதலித்ததாகவும், அவர் காதலை மறுத்ததால் கொலை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் செப்டம்பர் 18ம் தேதி மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் அறிவித்தனர். ஸ்வாதி கொலை வழக்கின் மர்மம் விலகாத நிலையில் ராம்குமாரின் தற்கொலை மேலும் சந்தேகங்களையும் சர்ச்சையையும் கிளப்பியது.

ராம்குமார் உடல் பரிசோதனை

ராம்குமார் உடல் பரிசோதனை

5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ராம்குமார் மரணத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பல்வேறு புதிய விஷயங்கள் வெளியாகியுள்ளன. ராம்குமார் உடலை முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர் வழங்கிய அறிக்கை தற்போது ஊடகம் ஒன்றின் வாயிலாக வெளியாகியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது. அப்போது ஆணையத்தின் முன்பாக மருத்துவர்கள் நேரில் ஆஜராகி அளித்த வாக்குமூலத்தின் அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மின்சாரம் தாக்கவில்லை

மின்சாரம் தாக்கவில்லை

அந்த வாக்குமூலத்தில் ராம்குமார் திசுக்களை ஆய்வு செய்து பார்த்ததில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதய திசுக்களை பரிசோதனை செய்ததில் அதுவும் நல்ல நிலையில் இருந்ததாகவும், இதயம், மண்ணீரல், கல்லீரல், மேலுதடு, கீழுதடு, சிறுநீரகம் போன்றவற்றில் திசுக்களை பரிசோதனை செய்து பார்த்ததில் அதுவும் நல்ல நிலையில் இருந்தது என்று வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணையம்

மனித உரிமை ஆணையம்

மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் உடலில் திசுக்களில் மாற்றம் இருக்குமா என்று அப்போது குறுக்கு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. "பொதுவாக இருக்கும்" என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார். ராம்குமார் உடலை நாங்கள் ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் இருவர் ஒரே மாதிரியான வாக்குமூலத்தை மாநில மனித உரிமை ஆணையத்திடம் வழங்கி இருக்கிறார்கள்.

மருத்துவர் வாக்குமூலம்

மருத்துவர் வாக்குமூலம்

சம்பவம் நடைபெற்ற தினத்தன்று மாலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் உடல் எடுத்து வரப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் சையது அப்துல் காதர் என்பவர் அந்த உடலை பெற்றுள்ளார். அவர்தான் முதல் சாட்சியாக இந்த வழக்கில் இருக்கிறார். மருத்துவரின் வாக்குமூலம் படி, ராம்குமார் உடலை தான் பெற்றபோது அவரது உடலில் நாடித்துடிப்பு இல்லை மற்றும் ரத்த அழுத்தம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

12 மணி நேரம் முன்பே இறந்த ராம்குமார்

12 மணி நேரம் முன்பே இறந்த ராம்குமார்

குறுக்கு விசாரணையில், ராம்குமாருக்கு, மரண விறைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறி இருந்ததா என்ற கேள்விக்கு, அது சரிதான் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார். மரணமடைந்த ஒருவரின் உடலில் மரண விறைப்பு ஏற்படுவதற்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஆகும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். எனவே 12 மணி நேரத்திற்கு முன்பே, இந்த மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற ஒரு சந்தேகம் இதன் மூலமாக உருவாகியுள்ளது. ராம்குமார் உடலில், மின்சார காயங்கள் எதுவும் இல்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

கொலையா என கேள்வி

கொலையா என கேள்வி

எனவே இதை எல்லாம் பார்க்கும் போது மின்சாரம் தாக்கி ராம்குமார் உயிரிழந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதும், அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்படும் 12 மணி நேரத்திற்கு முன்பே, ராம்குமார் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த செய்தி ஊடகத்தில் வெளியான நிலையில், அதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில கமிட்டி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், தமிழகமே கவனித்துக் கொண்டிருந்த ஸ்வாதி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்ததாக சொன்னதற்கு நேர்மாறாக புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன. அவர் மின்சாரம் தாக்கி மரணமடையவில்லை என்றால், வேறு என்ன காரணத்தால் ராம்குமார் மரணம் ஏற்பட்டது? அது தற்கொலையா அல்லது கொலையா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+