மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு!!
டெல்லி: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் மைத்ரிபாலவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் இந்தியாவுக்கு வருகை தருமாறும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்ரிபால சிறிசேனா முன்னிலை வகித்து வந்தார். அவருடன் மோதிய ராஜபக்சே தொடர்ந்து பின்னடைவை எதிர்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மைத்ரிபால சிறிசேன இன்று இலங்கையின் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டார். மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.
பின்னர் மைத்ரிபாலவுக்கு பிரதமர் மோடி அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ வாழ்த்து கடிதத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளீர்கள். இருதரப்பு உறவும் புதிய நிலைக்கு மேம்பாடு அடையட்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவுக்கு வருகை தருமாறும் மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications