பிரதமர் மோடி கல்வி சான்றிதழ் தர தேவை இல்லை; கெஜ்ரிவாலுக்கு ரூ.25, 000 அபராதம்: குஜராத் ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: பிரதமர் மோடியின் பட்ட படிப்பு தொடர்பான கல்வி சான்றிதழை தர தேவை இல்லை; பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ25,000 அபராதம் விதிக்கப்படுகிறது என குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி சான்றிதழ் தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 1978-ம் ஆண்டு பிரதமர் மோடி இளங்கலை பட்டப் படிப்பு பெற்றதாக கூறப்படுகிறது. அதேபோல் டெல்லி பல்கலைக் கழகத்தில் 1983-ம் ஆண்டு முதுகலை பட்டப் படிப்பு படித்தார் என்பதும் பொதுவான தகவல்.

ஆகையால் 1978-ம் ஆண்டு, 1983-ம் ஆண்டு படித்த அனைத்து மாணவர்கள் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம், டெல்லி பல்கலைக் கழகம், குஜராத் பல்கலைக் கழகம் ஆகியவற்றிடம் கோரியிருந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

PM Modi degree certificate need not be furnished, fine to Arvind Kejriwal: Gujarat High Court

கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடியின் பட்ட படிப்பு சான்றிதழ் விவரங்களை வழங்கலாம் என பிரதமர் அலுவலகம், குஜராத் பல்கலை கழகம், டெல்லி பல்கலை கழகம் ஆகியவற்றுக்கு தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக் கழகம், குஜராத் பல்கலைக் கழகங்கள் வழக்கு தொடர்ந்தன.

இது தொடர்பான வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றம், பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் வழங்க தேவை இல்லை. ஆகையால் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என கூறியது. அத்துடன் பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழை கேட்ட, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ25,000 அபராதம் விதித்தும் குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பைரேன் வைஷ்ணவ் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இவ்வழக்கில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், ஜனநாயகத்தில் பிரதமர் பதவி வகித்தவர் படித்தவரா? இல்லையா? என்பது முக்கியம் அல்ல. இதில் பொதுமக்கள் தலையிட வேண்டிய தேவையும் கிடையாது. இது தனிநபரை பாதிக்கக் கூடிய விஷயம் என வாதிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+