மனிதாபிமான உதவியை ரகசியமாக செய்த முதல்நபர் சுஷ்மா - மோடிக்கு துணிச்சல் இல்லை: ராகுல் பாய்ச்சல்!!
டெல்லி: உலகத்திலேயே மனிதாபிமான உதவியைக் கூட ரகசியமாக செய்த முதல்நபர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்தான் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
லோக்சபாவில் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவியது குறித்து காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பதிலளித்த சுஷ்மா ஸ்வரா, முன்னாள் பிரதமர் ராஜிவ், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் அமைச்சர் சிதம்பரம் என அனைவரையும் வறுத்தெடுத்து விளாசியிருந்தார்.

இதற்கு பதிலடியாக ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தியாவில் கருப்புப் பணத்தின் அடையாளமாக குறியீடாக இருப்பவர் லலித் மோடிதான். காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் கேள்வி கேட்கிறதோ அப்போதெல்லாம் எங்களை அமைதியாக உட்காரவைக்க முயற்சிக்கிறார்கள்..
உங்களால் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியை வாய்மூட வைத்துவிட முடியாது. லலித் மோடி விவகாரத்தில் பிரதமரின் நிலை என்ன என்பதை நாடு அறிய விரும்புகிறது.
ஆனால் இந்த நாடாளுமன்றத்துக்கு வந்து அமர்ந்து பிரச்சனையை எதிர்கொள்கிற துணிச்சல் பிரதமர் மோடிக்கு கிடையாது. லலித் மோடியிடம் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் குடும்பத்தினர் பணம் பெற்றது உண்மை.
லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் ரகசியமாக ஏன் உதவி செய்ய வேண்டும்? மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தேன் என்கிறார்... உலகத்திலேயே முதல் முறையாக மனிதாபிமான உதவியை ரகசியகமாக செய்தவர் சுஷ்மா ஸ்வராஜ்தான்..
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications