பதவி காலம் இனிதாக அமையட்டும்.. ராகுலுக்கு மோடி வாழ்த்து!

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்த ராகுல் காந்தியை தலைவராக்கினால் கட்சிக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வழி வகுக்கும் என்றும் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

PM Modi expressed his wishes to Rahul Gandhi

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு ஏராளமானோர் தங்களது வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.இந்நிலையில் ராகுலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறுகையில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். அவரது பதவிக் காலம் இனிதாக அமைய எனது வாழ்த்துகள் என்று மோடி தெரிவித்துள்ளார்.

இதேபோல் டிடிவி தினகரனும் டுவிட்டரில் ராகுலுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுலுக்கு வாழ்த்துக்கள். 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காங்கிரஸ் கட்சியில் சிறப்பு மிக்க முன்னாள் தலைவர்கள் வழியில் ராகுலின் பதவி காலம் இனிதாக அமைய வாழ்த்துகள் என்று தினகரன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+