மனைவியை கைவிட்ட மோடி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பூஜை செய்வதா? சு.சாமி சர்ச்சை
அயோத்தி: ஏறக்குறைய 15 ஆண்டுகள் போரிட்டு மனைவி சீதையை மீட்ட ராமனுக்காக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் தனது மனைவியை கைவிட்ட பிரதமர் மோடி பூஜை செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கேட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அயோத்தி... இந்தியாவின் புனித நகரில் ஒன்றான இது உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் அமைதியான நகரமாக விளங்கிய அயோத்தி 90ஸ் காலத்தில் செய்தித்தாள்களின் ஹெட்லைன்களில் இடம்பெற்றது. இதற்கு காரணம் அயோத்தியில் வெடித்த பாபர் மசூதி சர்ச்சை தான்.

இந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன. நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வந்தது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது ராமர் கோவிலின் முதற்கட்ட பணிகள் முடிந்துள்ளன.

இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கோவில் கர்ப்பகிரஹத்தில் (கருவறை) ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். கருவறையில் வைக்கப்படும் ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வந்து பூஜை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்ய பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அதோடு அவர் எழுப்பியுள்ள கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது. மனைவிக்காக போரிட்ட ராமனின் கோவிலுக்கு மனைவியை கைவிட்ட மோடி பூஜை செய்வதா? என கேள்வி எழுப்பி இருப்பது தான் சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக சுப்பிரமணியன் சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
‛‛ராமர் ஏறக்குறைய 15 ஆண்டுகள் போராடி தனது மனைவி சீதையை மீட்டார். இப்படியான சூழலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடியை பிரதிஷ்டை பூஜை செய்ய ராமர் பக்தர்களான நாம் எப்படி அனுமதிக்க முடியும்? ஏனென்றால் மோடி தனது மனைவியை கைவிட்டவராக அறியப்படுகிறார். இப்படி இருக்கும்போது அவர் தான் பூஜை செய்வாரா?'' எனக்கேட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications