நடிகர் கலாபவன் மணியின் மறைவால் வேதனை அடைந்துள்ளேன்: பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடிகர் கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த கலாபவன் மணி நேற்று இரவு மரணம் அடைந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பலியானார்.

PM Modi is pained by demise of Kalabhavan Mani

இந்நிலையில் அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. மணியின் மரண செய்தி குறித்த அறிந்த பிரதமர் நரேந்திர மோடி வேதனைப்பட்டு அதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

திறமையான நடிகரின் பயணம் பாதியில் முடிந்துவிட்டது. கலாபவன் மணி பன்முகத் திறமை கொண்டவர், பிரபலமானவர். அவரது மறைவால் வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+