அலுவலகப் பணிகளுக்கு இடையே தனது டுவிட்டர் பக்கத்தை நிர்வகிக்கும் மோடி !
டெல்லி: பல அலுவலகப் பணிகளுக்கு இடையே பிரதமர் மோடியின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தை அவரே நிர்வகித்துக் கொள்கிறார் என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை கடந்த மே 26-ம் தேதி நிறைவு செய்தது. பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடி பல்வேறு நாடுகளுக்கு தொடந்து பயணம் மேற்கொண்டு வந்தார். மோடியின் வெளிநாட்டு பயணம் ஒரு புறம் அவருக்கு புகழையும், மறுபுறம் கடும் விமர்சனத்தையும் தந்துள்ளது.

இந்த நிலையில் பிரதமராக பதவியேற்றதில் இருந்து அவரது அலுவலக பணி குறித்தும் அவர் எடுத்துள்ள விடுப்புகள் குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடி ஓராண்டுக்குள் 89 நாட்களில் 18 வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மக்களை தொடர்புகொள்வதற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அவர் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் அலுவலகத்துக்குகென அதிகாரபூர்வ ‘பேஸ்புக்" எனப்படும் சமூக வலைத்தள பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. பல அலுவலகப் பணிகளுக்கு இடையே அவரது பேஸ்புக், டுவிட்டர் பக்கத்தை அவரே நிர்வகித்து கொள்கிறார்.
பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மட்டும் அலுவலகம் தொடர்பான விஷயங்கள் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகம் 34 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட அளவிலான இணையதள சேவையை பயன்படுத்தி வருகின்றனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications