மோடி அவரும் தூங்க மாட்டார் எங்களையும் தூங்கவிட மாட்டார்: மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு
ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி அவரும் தூங்க மாட்டார் கேபினட் அமைச்சர்களையும் தூங்க விட மாட்டார் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்திய ஊரக வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்தார். விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறுகையில்,

நம் பிரதமர் அவரும் தூங்க மாட்டார் மற்றவர்களையும் தூங்கவிட மாட்டார். ஆனால் அது எங்களுக்கு பிடித்திருக்கிறது. ஏனென்றால் சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைப்பது பிடித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற திட்டத்தை முழுமையாக செயல்படுத்த 5 ஆண்டுகள் தேவைப்படும் என்று சில கேபினட் உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால் அத்திட்டத்தை ஓராண்டுக்குள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துவிட்டார்.
பிரதான் மந்திரி ஜன் தான் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 7 வாரங்களில் 6.99 கோடி பேருக்கு தற்போது வங்கி கணக்கு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்பு நாட்டு மக்கள் தொகையில் 58 சதவீதம் பேர் அதிலும் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது என்றார்.
பார்சிலோனாவுக்கு செல்ல வேண்டி இருந்ததால் வெங்கய்யா நாயுடு நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பிவிட்டார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications