‛‛கையில் திரிசூலம்’’.. நெற்றி நிறைய சந்தனம்.. மொத்தமாக மாறிய பிரதமர் மோடி.. வீடியோ பாருங்க
வாரணாசி: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிட உள்ளார். இந்நிலையில் தான் நேற்று வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்நாதர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி நெற்றி நிறைய சந்தனம் பூசி திரிசூலத்துடன் போஸ் கொடுத்த வீடியோ மற்றும் போட்டோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி உத்தர பிரதேசம் சென்றார். அங்கு தான் எம்பியாக உள்ள வாரணாசி தொகுதிக்கு அவர் சென்றார். இந்த தொகுதியில் பிரதமர் மோடி 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் வாரணாசியில் போட்டியிட்டு வாகை சூடி பிரதமரான மோடி மீண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசியில் களமிறங்க உள்ளார். சமீபத்தில் வெளியான பாஜகவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடியின் பெயர் இருந்தது.
இந்நிலையில் தான் வாரணாசியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார். பிரதமர் மோடியை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். அதன்பிறகு வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என சிவபெருமானை வேண்டி அவர் தரிசித்தார்.
Prayed at the Kashi Vishwanath Temple. Har Har Mahadev! pic.twitter.com/sDeJIDioYF
— Narendra Modi (@narendramodi) March 9, 2024
கோவிலில் சிவனுக்கு அபிசேகம் செய்தார். அர்ச்சகர் பிரதமர் மோடியின் நெற்றியில் சந்தனம் பூசினார். அதன்பிறகு பிரதமர் மோடி கோவிலுக்கு வெளியே வந்தார். பிரதமர் மோடியை பார்க்க ஏராளமானவர்கள் அங்கு குவிந்திருந்தனர். மோடியை பார்த்தவுடன் அவர்கள் மோடி.. மோடி.. என கோஷமிட்டனர்.
वाराणसी के भव्य-दिव्य श्री काशी विश्वनाथ मंदिर में पूजा-अर्चना से मन को हमेशा अद्भुत संतोष मिलता है। बाबा विश्वनाथ से आज यहां देशभर के अपने परिवारजनों के सुख-सौभाग्य और आरोग्य की कामना की। हर हर महादेव! pic.twitter.com/GKNWjPtQTW
— Narendra Modi (@narendramodi) March 10, 2024
இந்த வேளையில் கையில் ‛திரிசூலத்துடன் தோன்றினார். திரிசூலம் என்பது கடவுள் சிவபெருமானின் ஆயுதமாகும். அதனை பிரதமர் மோடி கையில் வைத் போஸ் கொடுத்ததால் பக்தர்கள் மற்றும் அவரது கட்சியினர் உற்சாகமடைந்தனர். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications