இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முழு ஆதரவு: பிரதமர் மோடி உறுதி!
டெல்லி: இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முழு ஆதரவு அளிக்கப்படும் என இஸ்லாமிய தலைவர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய தலைவர்களான சென்னையை சேர்ந்த சையது அலி அக்பர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஹாஜி அப்துல் ஹபீஸ் கான், மௌலானா அபுபக்கர் பசானி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சையத் அப்துல் ரசீத் அலி உள்பட 10 தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

அப்போது சமூக சூழ்நிலைகளை சீர்படுத்துதல், இஸ்லாமிய இளைஞர்களுக்கான கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய முழு ஆதரவு அளிப்பதாகவும், குறிப்பாக மசூதிகள், மதரசாக்களில் உள்ள கோரிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவதாகவும் மோடி அவர்களிடம் உறுதி அளித்தார்.
அதேபோல், நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமிய இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என அவர், இஸ்லாமிய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘நாட்டின் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் பாடுபடுவோம்' என இஸ்லாமிய தலைவர்களும் பிரதமரிடம் உறுதி அளித்தனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications