பலாத்காரத்தை தடுக்க வழியில்லை.. மோடி தோழி நீத்தா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பா? கேஜ்ரிவால் கோபம்
டெல்லி: டெல்லியில் தினம் தினம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு வருகிறார்கள்; அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட்டுவிட்டு, தனது தோழி நீத்தா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளார் பிரதமர் மோடி.. என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி மனைவி நீத்தா அம்பானிக்கு, விவிஐபிகளுக்கு வழங்கப்படும், ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. முகேஷுக்கு இசெட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்களில் நேற்று செய்தி வெளியானதும், கேஜ்ரிவால் கடும் கோபமடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை டிவிட்டரில் வெளிக்காட்டியுள்ளார்.

பலாத்காரங்கள்
டெல்லியில் தினமும் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள். பலமுறை வேண்டுகோள்விடுத்தும் கூட அந்த பெண்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்படவில்லை.
|
தோழிக்கு பாதுகாப்பு
பிரதமரோ, தனது தோழிக்கு (நீத்தா அம்பானி), உயரிய பாதுகாப்பை வழங்கியுள்ளார். இவ்வாறு கேஜ்ரிவால் கூறியதோடு, செய்தி வெளியான பேப்பர் கட்டிங்கையும் அதில் இணைத்துள்ளார்.

பாதுகாவலர்கள்
நீத்தாவின் ஒய் பிரிவு பாதுகாப்பில், 10 ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் இடம் பெற்றிருப்பர். நீத்தா செல்லும் இடங்களுக்கெல்லாம் அவர்களும் பயணிப்பர்.

காவல்துறை கட்டுப்பாடு
டெல்லியின் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுக்கு அந்த அதிகாரத்தை வழங்குமாறு கேஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நீத்தா அம்பானி பிரச்சினையை வைத்து குட்டியுள்ளார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications