பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பை 6 மாதங்களில் 5.6 ஆக சுருக்கிவிடுவாங்க விவசாயிகள்... ராகுல்
டெல்லி: பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பை விவசாயிகள் 6 மாதங்களில் 5.6 ஆக சுருக்கிவிடுவர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் காந்தி இன்று பேசியதாவது:
நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் இருந்த அரசாங்கம் லண்டனில் இருந்து இயக்கப்பட்டது. அதைப் போலத்தான் தற்போது ராஜஸ்தான் அரசையும் லலித் மோடி லண்டனில் இருந்து இயக்குகிறார். லலித் மோடி பட்டனை அமைக்க அதற்கேற்ப இங்கே ஆட்டம் போடுகிறார் வசுந்தர ராஜே.

லலித் மோடி அரசு
கருப்புப் பணத்தைப் பதுக்கும் நபருக்காக நாட்டின் சட்டத்தை உடைத்துத் தூள் தூளாக்கியிருக்கிறார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே. ராஜஸ்தானில் செயல்படுவது வசுந்தரராஜே அரசு அல்ல.. லலித் மோடி அரசுதான்...

நில ஆர்ஜித சட்டத்தை விடமாட்டோம்
லண்டனில் இருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவரான லலித் மோடி எனும் ரிமோட் கண்ட்ரோலில் ராஜஸ்தான் மாநில அரசு செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் நில ஆர்ஜித மசோதாவை கொண்டுவர விடவேமாட்டோம்.
ஏற்கெனவே 3 முறை நில ஆர்ஜித சட்டத்துக்கு அவசர சட்டத்தைப் பிறப்பித்து பார்த்திருக்கிறது மோடி அரசு. எப்படியும் நாடாளுமன்றத்தில் நில ஆர்ஜித சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும்.. நாங்கள் அதை அனுமதிக்கப்போவதில்லை..நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்...

5.6 ஆக சுருங்கும்..
ஒரு அங்குலம் நிலத்தைக் கூட மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து எடுக்க முடியாது. அடுத்த 6 மாதத்தில் பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பை 5.6 இஞ்ச்சாக விவசாயிகள் சுருக்கிவிடுவார்கள்..
தேர்தல் பிரசாரத்தின் போது ஒவ்வொருவருக்கும் ரூ15 லட்சத்தைத் தருவோம் என்றார் பிரதமர் மோடி. லண்டனில் பல லட்சம் கருப்பு பணத்துடன் லலித் மோடி பதுங்கி இருக்கிறார்.. அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த ராஜஸ்தான் அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

மவுனம் ஏன்?
மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல், மகாராஷ்டிராவில் பங்கஜா முண்டேவின் ஊழல், சத்தீஸ்கரில் தான் ஊழல்.. ஆனால் எதைபற்றியும் 56 இஞ்ச் பிரதமர் மோடி வாயே திறப்பது இல்லை...
லகான் திரைப்படத்தில் விவசாயிகள் பிளவுபட்ட நிற்க பிரிட்டிஷ் அரசு வெற்றி பெறும்.. பின்னர் விவசாயிகளே வெல்வார்கள்.. அதுதான் நடைமுறையில் நடக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications