For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொபைல்தான் பர்ஸ்ட்....மோடி வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இணைய வழி நிர்வாகத்தை வெற்றிகரமாக செயல்படுத்த மொபைல் போன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசியுள்ளார்.

டுவிட்டர் மூலம் 18 ஆவது தேசிய இணைய வழி அரசு சேவைக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய மோடி "மொபைல்கள் மூலம் முடிந்தவரை பல சேவைகளை வழங்கும் வழிகளை ஆராய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நமது மொபைல் போன்களுக்குள் இந்த உலகத்தைக்கொண்டு வருவோம்" என்றார்.

PM Modi's Mantra for Successful E-Governance: 'Mobiles First'

மேலும், இ-கவர்னன்ஸ் எனும் இணைய வழி நிர்வாகத்தை செயல்படுத்த எம்-கவர்னன்ஸ் எனப்படும் மொபைல் நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மோடி ட்வீட் செய்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பினேன், ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை எனவே டுவிட்டர் மூலமாக என் கருத்தை தெரிவிக்கிறேன் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tonc successfully implement e-governance, the country must think about 'mobiles first' and give importance to mobile governance, said Prime Minister Narendra Modi on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X