வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று பயணம்: ரூ. 3,800 கோடியிலான 44 நலத்திட்டங்களை தொடங்கிவைக்கவுள்ளார்
வாரணாசி: பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு இன்று செல்கிறார். ரூ. 3,880 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைக்கவும் உள்ளார். 100க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்கள், நூலகங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றை திறந்துவைக்கவுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 11) செல்கிறாா். பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் ரூ. 3,880 கோடி மதிப்பிலான 44 நலத் திட்டங்களை பிரதமா் தொடங்கி வைக்கவுள்ளார். ரோஹனியா, மெந்திகஞ்சில் பொதுக் கூட்ட அரங்கில், பிரதமா் மோடி திட்டங்களைத் தொடங்கிவைத்து, மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் பாஜகவினர் பல்வேறு விதமான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். பிரதமரை வரவேற்று நகரின் முக்கியப் பகுதிகளில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. வாரணாசியில் கிராமப்புற மேம்பாடு சாா்ந்த பல்வேறு பணிகளை மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைக்கவும் உள்ளார்.
130 குடிநீா் திட்டங்கள், 356 நூலகங்கள், புதிய பாலிடெக்னிக் கல்லூரி, அரசுக் கலை கல்லூரி 100 புதிய அங்கன்வாடி மையங்கள், ராம் நகரில் உள்ள காவல்துறை வளாகத்தில் ஒரு விடுதி ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். ரயில்வே மற்றும் வாரணாசி மேம்பாட்டு ஆணையம் இணைந்து சாஸ்திரி, சாம்னே படித்துறையில் மேற்கொண்ட மறுசீரமைப்புத் திட்டங்களையும் தொடங்கிவைக்கவுள்ளார்.
மேலும், வாரணாசியில் புதிதாக 15 துணை மின்நிலையங்கள், புதிய மின்பாதை அமைப்பு உள்பட ரூ. 2,250 கோடி மதிப்பிலான 25 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வாரணாசி விமான நிலையத்தின் சுரங்கப் பாதை திட்டம், 3 புதிய மேம்பாலங்கள், 2 விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்கள், துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். ஆளில்லா விமானங்கள், சிசிடிவி ஆகியவற்றின் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications