பிரதமர் மோடி 22 ந் தேதி வாரணாசி பயணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசி மற்றும் லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 22-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்ல உள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மோடி நான்கு முறை அவரது தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ளார். இதற்கு முன்பு ஜூன் 28 மற்றும் ஜூலை 16 ஆகிய தேதிகளில் வாரணாசி செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால் பலத்த மழை காரணமாக இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசி மற்றும் லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 22-ந்தேதி உத்தரபிரதேசம் செல்கிறார். காலை 10 மணிக்கு வாரணாசி செல்லும் பிரதமர், அங்கு சமூக நீதித்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் 12 மணிக்கு லக்னோ செல்லும் மோடி, அங்குள்ள அம்பேத்கர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, அம்பேத்கர் மகாசபாவில் நடைபெறும் நிகழ்ச்சி உள்ளிட்ட 3 நிகழ்வுகளில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 5.30 மணியளவில் டெல்லி திரும்புகிறார்.
மோடியின் வருகையையொட்டி மாநிலம் முழுவதும், குறிப்பாக லக்னோ, வாரணாசி நகரங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள நிலையில், அதிரடிப்படை மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் அடங்கிய 12 கம்பெனிகளை அனுப்புமாறு மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளதாக மாநில போலீசார் தெரிவித்தனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications