டெல்லி காவல் நிலையத்தில் பிரதமர் திடீர் சோதனை - சுத்தமாக இருக்கிறதா என நேரில் ஆய்வு
டெல்லி: தூய்மையான இந்தியா திட்டத்தை துவக்கி வைப்பதற்கு முன்னதாக பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காவல் நிலையம் ஒன்றிற்கு சென்று அங்குள்ள கழிவறைகள் சுத்தமாக வைக்கப் பட்டுள்ளதா என திடீர் சோதனை நடத்தினார்.
டெல்லியில் இன்று ‘தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். இது மகாத்மா காந்தியின் கனவுத் திட்டங்களில் ஒன்று. எனவே, வரும் 2019ம் ஆண்டிற்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்றுவோம் என்ற இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதன்படி, பள்ளிகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை மக்கள் தூய்மையாகப் பேணிக் காக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் வால்மீகி பஸ்தியில் பிரதமர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
வால்மீகி காலனி செல்வதற்கு முன்னதாக மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டார் மோடி. காரில் சென்று கொண்டிருந்த மோடி திடீரென காரை நிறுத்தி காவல் நிலையத்திற்கு உள்ளே வந்ததால், அங்கிருந்த காவலர்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.
காவல் நிலையம் எவ்வளவு சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது என நேரில் பார்வையிட்ட மோடி சிறிது நேரம் அங்கிருந்த காவலர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பொது இடங்களை எவ்வாறு தூய்மையாக வைத்திருப்பது என்பது குறித்து அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
நேற்று குஜராத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா திடீர் சோதனை நடத்தி, கழிவறைகளை தூய்மையாக பேணாத ரயில்வே அதிகாரி ஒருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று மோடி காவல் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications