பிரதமராகி படேல் சிலையை திறப்பேன் என நினைக்கவில்லை... நரேந்திர மோடி நெகிழ்ச்சி !
Recommended Video

அஹமதாபாத் : வல்லபாய் படேல் சிலையை பிரதமராக திறப்பதில் பெருமை கொள்கிறேன். சிலையை நிறுவ திட்டமிட்டபோது நான் பிரதமராவேன் என்று நினைக்கவில்லை.
குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிக உயரமான சிலையான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையில், இன்று வரலாற்றில் இந்தியாவிற்கு மிக முக்கியமான நாள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து நான் என்னுடைய உரையை தொடங்குகிறேன். இந்தியா ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன் இருக்கிறது என்ற உணர்வு எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்தில் பங்கேற்க முன்வந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.

ஒற்றுமையான இந்தியாவில் நாம் வாழ்வதற்கு அடித்தளமிட்டவர் சர்தார் வல்லபாய் படேல். சுதந்திரத்திற்கு பின்னர் அவர் எடுத்த முயற்சிகளின் விளைவாகவே இந்தியா இன்று இந்த நிலையில் இருக்கிறது. படேலின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். ஒற்றுமை சிலை இந்தியாவின் ஒற்றுமையை பறைசாற்றும். உலகிலேயே உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைய வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அந்தக் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு படேலின் சிலையை நாட்டிற்காக அர்ப்பணிக்கிறேன். இந்த தருணத்தை நான் மிகவும் பெருமையானதாக நினைக்கிறேன். சிலை அமைப்பதற்கான முதல் கல்லை நான் எடுத்துக் கொடுத்தேன். நான் முதல்வராக இருந்த போது படேல் சிலை அமைக்கப்படும் என்று போடப்பட்ட திட்டத்தை நான் பிரதமராக இருக்கும் போது திறந்து வைப்பேன் என்று நினைக்கவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications