தீபாவளி அன்று மோடி ஏன் ஸ்ரீநகர் செல்கிறார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி தினத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநகர் மக்களுடன் செலவிடுகிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் இது போன்ற சேதம் ஏற்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்டபோது பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

மேலும் தனது பிறந்தநாளை கொண்டாடாமல் ஜம்மு காஷ்மீருக்கு உதவுமாறு மோடி பாஜகவினர் மற்றும் மக்களை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மோடி வரும் 23ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். தலைநகர் ஸ்ரீநகருக்கு செல்லும் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தீபாவளி தினத்தை செலவிடுகிறார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தீபாவளி அன்று நான் ஸ்ரீநகரில் இருப்பேன். 23ம் தேதி ஸ்ரீநகர் சென்று அன்றைய தினத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுடன் செலவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+