ஓய்வின்றி மக்களுக்கு மேலும் சேவை செய்வோம்... குஜராத், ஹிமாச்சல் வெற்றிக்கு மோடி நன்றி

ஓய்வின்றி மக்களுக்கு மேலும் பல்வேறு சேவைகளை செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை வெற்றி என்பது பாஜகவின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தல்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் குஜராத்தில் பாஜக தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறது.

PM Narendra Modi thank the voters of Gujarat and Himachal Pradesh

அதே சமயம் ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியன தேர்தல் பிரசாரங்களில் பிரதிபலித்த போதிலும் மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், குஜராத், ஹிமாச்சலில் பாஜக வெற்றி என்பது நல்லாட்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு கிடைத்த வெற்றி. இந்த மாநிலங்களில் கடுமையாக பணியாற்றி வெற்றியை குவித்த பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி.

பாஜக மீது அன்பும், நம்பிக்கையும் வைத்து குஜராத் மற்றும் ஹிமாச்சல் தேர்தல்களில் மக்கள் அளித்துள்ள வெற்றியை தலைவணங்கி ஏற்கிறேன். வளர்ச்சி பணிகள் தொடரும். மக்களுக்கு ஓய்வின்றி உழைப்போம் என்றும் அவர் உறுதி
அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+