10-வது சர்வதேச யோகா தினம்- ஜம்மு காஷ்மீர் ஶ்ரீநகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு!
ஶ்ரீநகர்: 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் ஶ்ரீநகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனங்களை மேற்கொண்டார்.
உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குடன் கூடிய இந்த பிரகடனம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்
69-வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

10-வது சர்வதேச யோகா தினம் 2024 இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஶ்ரீநகரின் எஸ்கேஐசிசி-யில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்றார். "நமக்கும் சமுதாயத்திற்கும் யோகா" என்பதே இந்த ஆண்டின் மையக் கருத்தாகும்.
தனிநபர் ஆரோக்கியம் மற்றும் சமுதாய நல்லிணத்தை மேம்படுத்துவது யோகா முக்கியப் பங்கு வகிப்பதை எடுத்துக்காட்டும் வகையில், இந்த ஆண்டு மையக் கருத்து அமைந்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உலகளாவிய சுகாதாரம் மற்றும் நலவாழ்வை மேம்படுத்த, ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். யோகாவின் பலன் பெருமளவிலான மக்களை சென்றடைய செய்யும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் எழுதிய கடிதத்தில் முழுமையான ஆரோக்கியத்திற்கு, யோகா மற்றும் சிறு தானியங்கள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் சார்ந்த இயக்கமாக யோகா தினத்தை கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
டெல்லியில் மாற்றுத் திறனாளிகள் யோகா நிகழ்வு: மேலும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ், ஒரு தன்னாட்சி நிறுவனமாக இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் (PDUNIPPD), மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென சிறப்பு யோகா முகாமிற்கு ஏற்பாடு செய்தது. இந்த முகாமில், 550 மாற்றுத்திறனாளிகள், 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி டெல்லி பாரகம்பா சாலையில் உள்ள மாதிரி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் பி எல் வர்மா, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications