பா.ஜ.க.வுக்கு டெல்லி கதிதான் உ.பி., பீகாரிலும் நேரிடும்: சாபமிடுவது பிரதமர் மோடி சகோதரர்!
டெல்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிய பாரதிய ஜனதாவுக்கு டெல்லியில் ஏற்பட்ட தோல்வியைப் போலதான் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலும் ஏற்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சாடியுள்ளார்.
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நேற்று அகில இந்திய நியாய விலைக்கடைகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடியும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவரான அவர் கூறியதாவது:
மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது.
எங்கள் போராட்டம் இங்கே எடுத்து வரப்பட்டதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தோல்வியே காரணம் ஆகும்.
நான் செய்வது எனது சகோதரர் மோடிக்கு எதிரான புரட்சி அல்ல. என்னை பொறுத்தவரை எனது சகோதரர் மதிப்பு மிக்கவர்தான். அவரை நான் மதிக்கிறேன். எனினும், தொழில் ரீதியாக எனது குரலை சகோதரருக்கு முன்பாக எழுப்ப இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.
எங்களுடைய பிரச்சினைகளை பாரதிய ஜனதா கண்டு கொள்ளவில்லை என்றால் டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் நடந்ததுபோல் தான் உத்தரபிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களிலும் நடக்கும். நான் பாரதிய ஜனதாவின் உறுப்பினர்தான். ஆனாலும் தேசிய கட்சிகளின் தவறான கொள்கைகளை எதிர்க்கிறேன்.
இவ்வாறு பிரகலாத் மோடி கூறினார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications