நீரவ் மோடியின் மோசடி பற்றி பிரதமர் மோடிக்கு முன்பே தெரியும்.. 2016ல் அனுப்பப்பட்ட பரபரப்பு கடிதம்
நீரவ் மோடியின் மோசடி குறித்து பிரதமர் மோடிக்கு முன்பே தெரியும் என்று சமூக ஆர்வலர் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

டெல்லி: நீரவ் மோடியின் மோசடி குறித்து பிரதமர் மோடிக்கு முன்பே தெரியும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஹரி பிரசாத எஸ்.வி என்ற சமூக ஆர்வலர் இதுகுறித்து 2016லேயே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். தற்போது நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் நீரவ் மோடி.

பிரதமருக்கு கடிதம்
இந்த மோசடி தொடர்பாக பிரதமர் மோடிக்கு 2016ல் ஹரி கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் பல்லாயிரம் கோடி கணக்கில் நீரவ் மோசடி செய்துள்ளார் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதுகுறித்த விவரங்களை அவர் பிடிஎப் கோப்பாக தனியாக மெயில் செய்து இருக்கிறார்.

எவ்வளவு
அதேபோல அவருக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டுகளை தொகுத்து மோடிக்கு அனுப்பி இருக்கிறார். 31 வங்கிகள் அவரிடம் எப்படி ஏமாந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பஞ்சாப் வங்கி அதிகாரிகள் செய்த மோசடி குறித்தும் விளக்கி இருக்கிறார்.

மீண்டும் மீண்டும்
ஆனால் அவர் அனுப்பிய கடிதங்கள் எதற்கும் பதில் இல்லை. உடனே மீண்டும் அவர் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் பல்வேறு பத்திரிக்கைகளிடம் சென்று நீதி கிடைக்கவில்லை என்றுதான் உங்களிடம் வந்துள்ளோம். ஆனால் நீங்களும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யவில்லை என்று கடிதம் எழுதியுள்ளார்.

வரி செலுத்தவில்லை
அவர் இரண்டாவது கடிதத்தில் எவ்வளவு மோசடி நடந்து இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்த கணக்குளை வெளியிட்டு 9,800 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்து இருக்கலாம் என்றும் கேட்டுள்ளார். அதேபோல் அவர் வருமான வரி காட்டாதது குறித்தும் பேசியுள்ளார்.

மல்லையா
முக்கியமாக அதில் ''சஹாரா நிறுவனர் சுப்ரதா ராய் போலவும், விஜய் மல்லையா போலவும் இன்னொரு நபர் நாட்டில் உருவாகக் கூடாது. மக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இவர்கள் வெளியில் சந்தோசமாக காலரை உயர்த்திவிட்டு சுற்றுகிறார்கள். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்'' என்றுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications