ரூ. 11,000 கோடி 'மெகா' மோசடி... பஞ்சாப் நேஷனல் வங்கியின் திணற வைக்கும் முறைகேடு!
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மும்பை : பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பரோடி கிளையில் ரூ. 11 ஆயிரம் கோடி மெகா மோசடி நடந்துள்ளதாக வங்கியே பங்குச்சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுமதிக்கான கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் இந்த மோசடி அரங்கேறியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி நேற்று மும்பை பங்குச்சந்தைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் மும்பை பரோடி கிளையில் ரூ. 11 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் உயர் அதிகாரிகள் 10 நாட்களுக்கு முன்னர் நடத்திய சோதனையில் இது தெரிய வந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஆதாயம் அடைவதற்காக அதிகாரப்பூர்வமற்ற தகவல் கொடுத்து, அதன் மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. மேலும் வங்கி அதிகாரிகள் சில வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுமதிக்கான கடன் பொறுப்பேற்பு ஆவணங்களில் மோசடி செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.
வாடிக்கையாளர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அளித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் வெளிநாட்டு வங்கிகள் 177 கோடி டாலர் அளவிற்கு பணப்பரிவர்த்தனை செய்துள்ளன. இதில் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் இந்த பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ. 11 ஆயிரம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து வங்கி அதிகாரிகளே அரங்கேற்றியுள்ள இந்த முறைகேடு குறித்து வங்கி வெளிப்படையாக தெரிவித்தாலும், இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை பங்குச்சந்தையில் தெரிவித்த இந்த தகவலால் அதன் பங்குகள் நேற்று ஒரே நாளில் ரூ. 3,8000 கோடி அளவிற்கு வீழ்ச்சி கண்டன. மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வங்கி சிபிஐ உதவியை நாடியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications