ஆசிரியையிடம் 3 லட்சம் லஞ்சம் கேட்ட தலைமையாசிரியர் - லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் பள்ளி ஆசிரியையிடம் ரூபாய் 3 லட்சம் கேட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், செகந்திராபாத் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி அடுத்த வருடம் ஓய்வு பெற உள்ளார் ஒருவர். அவருக்கு அப்பள்ளியில் 35 வருட கால அனுபவம் உள்ளது.
அப்படிப்பட்ட நிலையில் அவருடைய சாதிச்சான்றிதழில் பிரச்சனை உள்ளதால் பென்ஷன் போன்ற பலன்களை அவர் பெற முடியாது என்று அப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகேஷ்வர ராவ் மற்றும் பள்ளி அலுவலக கண்காணிப்பாளர் நரசிம்மலு ஆகியோர் இதற்காக ரூபாய் 3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்த ஆசிரியை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து தலைமை ஆசிரியரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து லஞ்சம் தருவதாக கூறி ஆசிரியை அவர்களை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்தார்.
1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 லட்ச ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை நாகேஷ்வர் ராவ் மற்றும் நரசிம்மலு ஆகியோர் வாங்கியபோது மறைந்திருந்த அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications