ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்ட பத்ரிநாத் பூசாரி... துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்!
டேராடூன்: மர்மமான முறையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பத்ரிநாத் கோவில் பூசாரி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத்தில் டீர்த் புரோஹிட் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ் பட் (50) என்ற பூசாரி. இவர் கடந்த சனிக்கிழமையன்று இரவு தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
பிரகாஷ் பட்டின் உடலை முதலில் அவரது சக பூசாரி ஒருவரே கண்டு போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். கோவில் பூஜைக்கு வராதது குறித்து நேரில் விசாரிக்க வந்தபோது, பிரகாஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
பிரகாஷின் தலையில் பல காயங்கள் இருந்ததாகவும், காதிலிருந்து ரத்தம் வடிந்தவாறு காணப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனபோதும், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் கிடைத்தபிறகே இது தொடர்பாக தெளிவான விவரங்கள் அறிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய புனித தலமான பத்ரிநாத்தில் இவ்வாறு பூசாரி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அங்குள்ளோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இக்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications