சன்னி லியோன் குறித்த சர்ச்சை... ராம் கோபால் வர்மா மீது போலீசில் புகார்!
ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக இந்துமத குழுவை சேர்ந்த பிரதிக்ஷா என்பவர் கோவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மும்பை: நடிகை சன்னி லியோன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது கோவா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா டிவிட்டர் பக்கத்தில், உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. ராம் கோபால் வர்மாவை கண்டித்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதாக பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக இந்துமத குழுவை சேர்ந்த பிரதிக்ஷா என்பவர் கோவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், ராம் கோபால் வர்மாவின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கவேண்டும் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மும்பையிலும் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனிடையே ராம்கோபால் வர்மாவின் படத்தில் பணியாற்றுவதை புறக்கணிப்பதாக சில திரைப்பட தொழிலாளர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications