தொடர் உண்ணாவிரதம் இருந்த ஜெகனை குண்டுகட்டாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்
குண்டூர்: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக ட்ரிப்ஸ் ஏற்ற வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த அவரின் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை 4 மணிக்கு உண்ணாவிரதப் பந்தலில் இருந்து ஜெகனை வம்படியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு வலுக்கட்டாயமாக ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது. இதையடுத்து ஜெகனின் தாய் விஜயம்மா, மனைவி பாரதி, குடும்பத்தார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த விடாமல் செய்த போலீசார் கட்சியினரின் கோபத்திற்கு ஆளாகினர். ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என்று கூறினார் ஜெகன். ஆனால் தொடர் உண்ணாவிரதத்தால் அவரால் பேசக் கூட முடியாமல் போனது கட்சியினரை கலங்க வைத்தது.
ஜெகனின் சிறுநீரில் கீடோன்ஸின் அளவு அதிகரித்ததால் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு முன்பு டாக்டர்கள் அவரை வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications