போலீஸ் குதிரையை கொடூரமாக தாக்கி காலை உடைத்த பாஜக எம்.எல்.ஏ.. வைரலாகும் வீடியோ
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில், காங்கிரஸ் அரசுக்கு எதிரான போட்டத்தின்போது, உருட்டுக்கட்டையால் போலீஸ் குதிரையின் காலை தாக்கி உடைத்த பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் கேமராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது.
உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் தலைநகர் டேராடூனில் பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசின் குதிரைப்படை பிரிவு வந்திருந்தது. அப்போது, வெறி வந்தவர் போல காணப்பட்ட கணேஷ் ஜோஷி, உருட்டுக்கட்டையை எடுத்து, போலீஸ்காரர் ஒருவர் அமர்ந்திருந்த குதிரையின் கால்களை கொடூரமாக ஓங்கி, ஓங்கி அடித்தார்.

சரிந்த குதிரை
இந்த தாக்குதலில் குதிரை அப்படியே கீழே விழுந்தது. அதன் கால்களில் முறிவு ஏற்பட்டு, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்தனர்.

அதிர்ச்சி
குதிரையை எம்.எல்.ஏ தாக்கிய சம்பவம் வீடியோக்களாக வெளியாகியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் விலங்குகள் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு
இதுகுறித்து, பிராணிகள் வதை தடுப்பு சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 3 பிரிவுகளில் கணேஷ் ஜோஷி மீது டேராடூன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சக்திமான்
தாக்குதலுக்கு உள்ளான குதிரை பெயர் சக்திமான். 2007ம் ஆண்டில் ரூ.95 ஆயிரம் விலைக்கு காவல்துறையால் வாங்கப்பட்டது. திடகாத்திர தோற்றம் கொண்ட சக்திமான் குதிரை, பல போராட்டக்களங்களை சந்தித்த வரலாறு கொண்டது.
மருத்துவர்கள்
குதிரையை பரிசோதித்த டாக்டர்கள் உடைபட்ட காலை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இனிமேல் அது காவல்துறைக்கு பயன்படுத்த முடியாது என்று தெரிகிறது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி











Click it and Unblock the Notifications