Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராக்கிங் செய்தவர்களை பிடிக்க மப்டியில் போன போலீஸ்! கலக்கிய கான்ஸ்டபிள் ஷாலினி.. கலங்கிய மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் ராக்கிங் செய்த மாணவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் மாணவர்களாகவே வேடமிட்டுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் அமைந்திருக்கிறது. MGM எனும் தனியார் மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரியில் ராக்கிங் தொடர்பான புகார்கள் அதிக அளவு தொடர்ந்து வந்துகொண்டே இருந்துள்ளன. ஆனால் புகார் கொடுத்தவர் தன்னுடைய அடையாளத்தை வெளியிடவில்லை.

அதேபோல குற்றச்சாட்டுகளுக்கான போதிய ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இதனால் ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் காவல்துறையினரால் முடியவில்லை.

உளவு

உளவு

எனவே இந்தூர் சன்யோகிதகஞ்ச் காவல்நிலையத்தின் அதிகாரிகள் ஒரு திட்டத்தை தீட்டினர். திட்டத்தின்படி சம்பந்தப்பட்ட கல்லூரிக்குள் போலீஸ்காரர்கள் சிலரை இறக்க முடிவு செய்தனர். ஆனால் இது வெளியில் தெரிந்தால் குற்றவாளியை பிடிக்க முடியாமல் போய்விடும். மட்டுமல்லாமல் காவல்துறைக்கான நற்பெயரில் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று யோசித்தனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரி காசி இந்த திட்டத்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினார். இதன்படி பெண் காவலர் ஒருவர் மருத்துவ கல்லூரி மாணவியாக சேர வேண்டும். அவருடன் இரண்டு ஆண் காவலர்களும் சேர்வார்கள். அவர்கள் உள்ளிருந்து உளவு பார்த்து ஆதாரங்களை சேகரிக்க வேண்டும்.

வாட்ஸ்அப் குழு

வாட்ஸ்அப் குழு

திட்டத்தின்படி ஷாலினி எனும் கான்ஸ்டபிளை மருத்துவ கல்லூரிக்குள் சேர்த்தனர். பின்னர் அவரை தொடர்ந்து மேலும் இரண்டு ஆண் கான்ஸ்டபிள்கள் மாணவர்களாக சேர்க்கப்பட்டனர். ஷாலினி மிகவும் இயல்பான பெண். மட்டுமல்லாது அவர் அனைவரிடமும் சகஜமாக பேசும் தன்மை கொண்டவர் என்பதால் எல்லோரிடமும் சீக்கிரத்தில் நட்பாகிவிடுவார். இந்நிலையில் நினைத்தபடி எல்லாம் சரியாக போய்கொண்டிருந்தது. ஷாலினி முதலில் கேன்டீனில் உள்ள அனைவரிடத்திலும் நட்பாக பேசி விஷயத்தை மெல்ல கறக்க தொடங்கினார். பின்னர் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்து என்ன நடக்கிறது என்பதை கவனிக்க தொடங்கினார்.

பின்னடைவு

பின்னடைவு

எதிர்பார்த்ததைப்போல அனைத்தும் நடந்தாலும் ராக்கிங் கல்லூரி வளாகத்தில் நடக்கவில்லை. இது காவல்துறையினரின் மண்டையை குழப்பியது. ராகிங் நடக்கும் இடத்தை அறிவது தற்போது மற்றொரு சவாலாக மாறியது. இதனால், கான்ஸ்டபிள் ஷாலினி சீனியர் மாணவர்களுடன் பழக தொடங்கினார். பின்னர் அவர்களின் வாட்ஸ் குழுக்களில் இணைந்து ராகிங் குறித்த தகவல்களை தேடினார். ஆனால் அங்கேயும் எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. இப்படியே போய்கொண்டிருக்கையில் பேசாமல் இந்த 'ஆப்ரேஷனை' கைவிட்டுவிடலாமா என்று கூட அதிகாரிகள் யோசிக்க தொடங்கிவிட்டனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அப்போதுதான் முக்கியமான 'லீடு' ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, ஜூனியர் மாணவர்கள் சீனியர் மாணவர்கள் வசிக்கும் விடுதிகளுக்கும், அவர்களது அப்பார்ட்மென்ட்டுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளனர். ஒன்றிரண்டு மாணவர்கள் சென்றால் பரவாயில்லை ஆனால் ஜூனியர் மாணவர்கள் 'பல்காக' சென்று வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அப்படி சென்ற ஜூனியர் மாணவர்களிடம் இரண்டு ஆண் காவலர்கள் நட்பாகி அவர்களிடம் இருந்து விஷயத்தை கரந்து ஷாலினியிடம் சொல்ல ஜூனியர் மாணவர்களின் தோழிகளிடம் விசாரித்த ஷாலினிக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

அதாவது ராகிங் குறித்த புகார்கள் காவல்துறையினருக்கு சென்றுள்ளதை அறிந்துகொண்ட சீனியர் மாணவர்கள், தங்கள் அப்பாட்மென்ட்களுக்கு ஜூனியர்களை வரவழைத்து ராகிங் செய்துள்ளனர். இதனையடுத்து அப்பாட்மென்ட் இருப்பிடம், இது தொடர்பான கால் ரெக்கார்ட்டுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை சேகரித்த பின்னர் சீனியர் மாணவர்களுக்கு எதிராக CrPc பிரிவு 41A இன் கீழ் நோட்டீஸை காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். அதில் மாணவர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 11 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்திருக்கிறது.

சமர்ப்பணம்

சமர்ப்பணம்

ஒருவழியாக இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து இது தொடர்பான முழு விவரத்தையும் காவல்துறை அதிகாரிகள் பேட்டியில் கூறியுள்ளனர். இதில் முக்கிய பங்காற்றியவர் கான்ஸ்டபிள் ஷாலிதான் என்றும் பாராட்டியுள்ளனர். இது குறித்து பேட்டியளித்த ஷாலினி, "எனது தந்தைதான் எனக்கு இன்ஸ்பரேஷன். ஆனால் அவர் தற்போது உயிருடன் இல்லை. அவர் இருந்திருந்தால் பெருமையடைந்திருப்பார். அதேபோல எனது தாயும் இப்போது உயிருடன் இல்லை. இது என்னுடைய முதல் ஆப்ரேஷன் இதனை அவர்கள் இருவருக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறியுள்ளார். ராகிங் செய்த மாணவர்களை மாறுவேடமிட்டு பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+