10 வயது சிறுமியை நிர்வாணமாக்கி செல்போனில் படம்பிடித்த பாதிரியார்
திருவனந்தபுரம்: பத்து வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த கேரள தேவாலய பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தளிக்கட்டுச்சேரியிலுள்ள புனித பவுல் தேவாலயத்தில் பாதிரியாக இருப்பவர் ராஜு கொக்கன் (44). இந்த தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி மீது ராஜு கொக்கனுக்கு காம எண்ணம் இருந்து வந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தேவாலயம் வந்த அச்சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்ற பாதிரியார், அச்சிறுமியின் ஆடைகளை அவிழ்த்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பாதிரியாரின் செய்கையால் அதிர்ச்சிடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளாள்.
இதையடுத்து பாதிரியார் மீது சிறுமியின் பெற்றோர் திருச்சூர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளனர்.
புகாரின்பேரில் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததுள்ளதால் அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவாகியுள்ளார்.
புகார் பற்றிய தகவலறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார் திருச்சூர் மறைமாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜியோகடவில் இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் உண்மையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் தேவாலய சட்டப்படி பாதிரியார் ராஜு கொக்கன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications