கோவிலில் ஆடு பலியிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்... இது எங்க தெரியுமா!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கோவிலில் ஆடு பலி கொடுப்பதற்காக ஆட்டின் தலையை வெட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் தியோலி-மஞ்சி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் பன்வர் சிங். சில நாட்களுக்கு முன்பு பரன் மாவட்டத்தின் கஸ்பத்தானா காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோவிலில் பன்வர் சிங் பேரனுக்கு, மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தும் விழா நடந்தது.
கோவிலுக்கு ஆடு ஒன்று பலி கொடுக்கப்பட்டது. பன்வர் சிங் அரிவாளால் ஆட்டின் தலையை வெட்டி பலி கொடுத்தார். இது தொடர்பான 45 நிமிடங்கள் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை பார்த்த விலங்குகள் நல வாரிய அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கோட்டா எஸ்.பி. சரத் சவுத்ரி, இந்த வீடியோ பதிவின் அடிப்படையில் பன்வர் சிங் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பன்வர் சிங் பணியிடை நீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications