வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்! பொதுமக்கள் தர்ம அடி
அனந்தபுரம்: ஆந்திராவில் தனது வீட்டு மாடியில் குடியிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் புக்கராய சமுத்திரம் மண்டல சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் ராமையா. இவரது வீட்டின் மாடியில் கணவன் மற்றும் மனைவி குடியிருந்து வருகிறார்கள். மனைவிக்கு சுமார் 35 வயது இருக்கும். கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் ஆசை சப்-இன்ஸ்பெக்டருக்கு ஏற்பட்டது.
எனவே, சம்பவத்தன்று, தனிமையில் இருந்த அந்த பெண்ணின் வீட்டுக்குள் ராமையா திடீரென நுழைந்துள்ளார். என்ன விஷயம் என்று அந்த பெண் கேட்டதற்கு, உனது கணவர் பேசுகிறார் என்று கூறி செல்போனை கொடுத்துள்ளார். இதை நம்பிய அந்த பெண்மும், செல்போனில் பேச முயன்றுள்ளார். அப்போதுதான், தனது கணவர் போனில் அழைக்கவில்லை என்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது.
இருப்பினும், அப் பெண் சுதாரிப்பதற்குள், கதவை மூடிய, ராமையா, பலாத்காரம் செய்தார். பெண்ணின் அலறல் சத்தம் தொடர்ந்து கேட்பதையடுத்து அக்கம்பக்கத்தில் வசிப்போர் ஓடி வந்துள்ளனர்.
அவர்கள் ராமையாவை அடித்து உதைத்தனர். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார். பெண்ணை கற்பழித்த சப்- இன்ஸ்பெக்டர் ராமையா கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications