அய்யாக்கண்ணுவை மட்டும் கைது செய்து தூக்கிச் சென்ற டெல்லி போலீஸ்.. என்ன உள்நோக்கம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டதற்காக டெல்லியில் விவசாயி அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாகண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 20 நாட்களை தாண்டியுள்ள போராட்டத்தின்போது, பாம்பு கறி சாப்பிடுவது, எலிக்கறி சாப்பிடுவது என பல்வேறு வகையான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியல் நடத்தினர்.

Police was arrested Tamilnadu farmer association leader Ayyakannu

கையை அறுத்துக்கொள்வது, பாதி மொட்டையடிப்பது போன்ற போராட்டங்களையும் நடத்தினர். இந்த நிலையில், டெல்லியில் ரிசர்வ் வங்கி முன்பு இன்று தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக கூறி போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியுள்ளனர்.

பாதுகாப்பு மிக்க பகுதி என்பதால், போலீசார் உடனடியாக போராட்டக்காரர்களை கைது செய்தனர். சுமார் 15 பேரை ஜந்தர்மந்தரிலேயே போலீசார் விட்டுவிட்டனர். அய்யாகண்ணு உள்ளிட்ட 10 பேரை டெல்லி நாடாளுமன்ற வீதி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே தாங்கள் போராட்டம் நடத்த ரிசர்வ் வங்கி பக்கம் போகவில்லை என்றும், ரேடியோ நிலையத்தை பார்க்கலாம் என்றுதான் அந்த பக்கம் போனதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+