"அடையாளம்".. மீசை என் சுயமரியாதை.. கழுத்து வரை நீளமான மீசை வைத்த கான்ஸ்டபிள் அதிரடி சஸ்பெண்ட்..!
நீளமாக மீசை வைத்த கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
போபால்: மீசையை மிக நீளமாக வைத்த காரணத்தினாலும், அதை டிரிம் செய்ய மறுத்ததாலும், போலீஸ்காரர் ஒருவர் சஸ்பெண்ட் ஆன சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது.
மத்திய பிரதேச காவல்துறையின் போக்குவரத்து பிரிவை சேர்ந்தவர் ராகேஷ் ரானா.. இவர் அதே போக்குவரத்து பிரிவில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்..
இவர் சமீப காலமாக மீசை வளர்க்க ஆரம்பித்துள்ளார்.. அந்த மீசை கழுத்து பகுதி வரை வளர்ந்து நீண்டு தொங்கி கொண்டுள்ளது.. அந்த நீண்ட மீசையுடனேயே வலம் வந்துள்ளார்..

கான்ஸ்டபிள்
இதை பார்த்த உயரதிகாரிகள், மீசையை டிரிம் செய்யும்படி ராகேஷுக்கு உத்தரவிட்டுள்ளனர்.. ஆனால், அதிகாரிகளின் பேச்சை ராகேஷ் காதில் போட்டுக் கொள்ளவில்லை.. அத்துடன் கழுத்து வரையிலான மீசையுடனேயே பணியாற்றி வந்துள்ளார்.. உயரதிகாரிகள் உத்தரவிட்டும், அதை பின்பற்றாததால், ராகேஷை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்..

தோற்றம்
இந்த சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்த உதவி ஆய்வாளர்-ஜெனரல் பிரசாந்த் சர்மா சொல்லும்போது, "ரானா தனது தோற்றம் குறித்து சீனியர் அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது தோற்றத்தை பரிசோதித்தபோது, கான்ஸ்டபிள் முடி வளர்த்து கழுத்து வரை மீசையுடன் காணப்பட்டார். அது மோசமாக இருந்ததால், முடியை கத்தரித்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.. ஆனால் அவர் உத்தரவுகளை பின்பற்றவில்லை.. இந்த நடவடிக்கையானது மற்ற காவலர்களையும் ஊக்கப்படுத்தும்... அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.

சஸ்பெண்ட்
ஆனால், இந்த சஸ்பெண்ட் குறித்து ராகேஷ் ரானா சொல்லும்போது, "இந்த மீசை என்னுடைய சுயமரியாதை.. அதனால்தான் வெட்டவும் மறுத்தேன்.. டிரிம் செய்யவும் மறுத்தேன்.. சீருடை விதிகளின்படி "ஒழுக்கமின்மை" என்ற பிரிவின் கீழ் என் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை பாரபட்சமாகவே நான் பார்க்கிறேன்... எத்தனையோ போலீஸ்காரர்கள், காவல்துறை அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் இப்படி மீசையை கம்பீரமாக வைத்திருக்கிறார்கள்.. அவர்களை பார்க்கும்போது அழகாக உள்ளது...

நடவடிக்கை
என் மீசை குறித்து மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? நான் கடந்த ஒரு வருடமாக என்னுடைய கடமையை சிறப்பாக செய்து வருகிறேன்... என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.. ஆனால், நான் ஒரு ராஜபுத்திரன்... என் மீசை என்னுடைய பெருமை.. சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் இந்த மீசை விஷயத்தில் மட்டும் சமரசம் செய்ய மாட்டேன்" என்று கறாராக கூறுகிறார்... மீசையின் நீளத்தை குறைக்காததால் போலீஸ்காரர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
-
தீ என பரவிய வதந்தி.. தப்பிக்க பக்கத்து தண்டவாளத்தில் குதித்த 4 பேருக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி வீடியோ -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications