"மோடி" விசுவாசத்தை ஓவராக காட்டி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய தேர்தல் ஆணையர் ஜோதி!
பிரதமர் மோடி மீதான விசுவாசத்தை காட்டும் வகையில் குஜராத் சட்டசபை தேர்தலில் செயல்பட்டதால் தேர்தல் ஆணையம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருந்தது.
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடிக்கான விசுவாசத்தை ரொம்பவே அதிகமாக குஜராத் தேர்தலில் காட்டிவிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி. ஆனால் ஜோதியின் இந்த நடவடிக்கையால் இந்திய ஜனநாயகத்துக்கு பெரும் அவமானத்தைத்தான் தேடி தந்திருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த போது தலைமைச் செயலராக பதவி வகித்தவர்தான் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி. இதனால்தான் குஜராத் சட்டசபைக்கான தேர்தலை உரிய நேரத்தில் அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்தார் ஜோதி.
இது பெரும் சர்ச்சையாகிப் போனது. ஆனால் மத்திய அரசோ இந்த சைக்கிள் கேப்பில் குஜராத் வாக்காளர்களை திருப்திபடுத்துகிறவகையில் திட்டங்களை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் குஜராத்தில் தேர்தல் ஆணையம் முழுவதும் பாஜகவுக்கு சார்பாக அப்பட்டமாக நடந்து கொண்டது.

தேர்தல் அறிக்கை
பாஜக தலைவர்கள் வீட்டிலேயே பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், வாக்காளர்களுக்கு தருவதற்காக கடத்தி கொண்டுவரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையமோ கண்டுகொள்ளவே இல்லை. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்புதான் தேர்தல் அறிக்கையையே பாஜக வெளியிட்டது.

மோடி பிரசாரம்
ஆனால் பேட்டி கொடுத்தார் என்பதற்காக ராகுல் காந்தியையும் ஒளிபரப்பினார்கள் என்பதற்காக வழக்கு போடுவதாக ஊடகங்களையும் மிரட்டியது இதே ஜோதி தலைமையிலான தேர்தல் ஆணையம். அதுமட்டுமல்ல பச்சையாகவே இந்து முஸ்லிம் பிரச்சனையை முன்வைத்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை
நாட்டின் துணை ஜனாதிபதி பொறுப்பில் இருந்த ஹமீது அன்சாரியையும் மோடி விட்டுவைக்கவில்லை.. பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கையும் விட்டு வைக்கவில்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் அவதூறாக பேசி இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்த போராடினார் மோடி. அதையும் கூட தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.

அக்கறையற்ற தேர்தல் ஆணையம்
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பிரசார கூட்டங்களில் வெறுப்பு பேச்சுகளை மோடி கக்கிக் கொண்டிருந்ததை கம்மென்று வேடிக்கை பார்த்தது ஜோதியின் தேர்தல் ஆணையம். இதனைவிட இதுவரை இல்லாத வகையில் நூற்றுக்கணக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து போயின. ஆனால் அதைப்பற்றியெல்லாம் அக்கறையும் இல்லாமல் இருந்தது இதே தேர்தல் ஆணையம்.

கேலிக்கூத்து
மேலும் வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒப்புகைச் சீட்டை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற ஜனநாயகக் கோரிக்கையையும் ஏற்க மறுத்து விட்டது தேர்தல் ஆணையம். மோடி மீதான விசுவாசத்துக்காக இப்படி ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கி விட்டது தேர்தல் ஆணையம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications