ஹே..ஹே..ராஜஸ்தானில் தப்பிக்கும் காங்கிரஸ் ஆட்சி? பாஜக ‘தலையில்’ இடியா? சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தேர்தலில் தப்பி பிழைத்துவிடும் என ஆறுதல் சொல்கிறது Political Critic கருத்து கணிப்பு.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நவம்பர் 25-ந் தேதி நடைபெற உள்ளது.

குடுமிபிடி சண்டையில் காங்கிரஸ்: ராஜஸ்தானில் 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 108 இடங்களிலும் பாஜக 70 இடங்களிலும் வென்றது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான உட்கட்சி மோதல் தற்போது வரை இடைவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. இந்த உட்கட்சி மோதல் ஆளும் காங்கிரஸுக்கு ஆகப் பெரும் அழிவைத் தரும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருந்தது.
குழப்பத்தில் பாஜக: அதேநேரத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அதிருப்தி அலையை அறுவடை செய்ய வேண்டிய பாஜகவும் இதேபோல உட்கட்சி பூசலால் போராடிக் கொண்டிருக்கிறது. சட்டசபை தேர்தல்களில் மோடியை முன்னிறுத்துவதா? உள்ளூர் தலைவர்களை முன்னிறுத்துவதா? மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி சாதனைகளை சொல்வதா? காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீவிர பிரசாரத்தை முன்னெடுப்பதா? என்கிற குழப்பங்களில் பாஜக சிக்கி திணறிக் கொண்டிருந்தது.
அதிரடி வாக்குறுதிகள்: இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத வகையில் புதிய தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது. ராஜஸ்தானில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்; சிலிண்டர் விலை ரூ.500க்கு வழங்கப்படும்; மாட்டு சாணத்தை ரூ2-க்கு கொள்முதல் செய்வோம் என்றெல்லாம் அதிரடி வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.

பாஜகவுக்கு இதுவரை சாதகம்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பாஜகவுக்கு சாதகமாக இருந்து வந்தன. ஆனால் தற்போது Political Critic நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சியை தரக் கூடியதாக இருக்கின்றன.
சர்வே சொல்வது என்ன?: Political Critic கருத்து கணிப்பு முடிவுகள்: ஆளும் காங்கிரஸ் 100 முதல் 110 இடங்களையும் பாஜக 70 முதல் 80 இடங்களையும் பெறும் என்கிறது. இதர கட்சிகளுக்கு 15 முதல் 20 இடங்கள் கிடைக்கலாம் எனவும் இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications