ஓட்டு போட சொல்லி பிரச்சாரம் செய்த கோஹ்லியே ஓட்டு போடலப்பா...
டெல்லி: புதிய வாக்காளர்கள் வாக்களிப்பது அவர்களின் கடமை என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த கிரிக்கெட் வீரர் கோஹ்லி கடந்த 10ம் தேதி டெல்லியில் இருந்தும் வாக்களிக்கவில்லை.
வாக்களிப்பது ஜனநாயக கடமை. உங்களின் கடமையை நிறைவேற்றுங்கள் என்று தேர்தல் ஆணையம் பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.
அப்படி கடந்த ஆண்டு டெல்லி தேர்தலுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கோஹ்லி கலந்து கொண்டார்.

விழிப்புணர்வு
வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று கூறும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கடந்த 2012ம் ஆண்டு கலந்து கொண்டவர் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. மேலும் இம்முறை புதிய வாக்காளர்களை வாக்களிக்க அவர் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

வாக்களிக்கவில்லை
கோஹ்லியின் பெயர் டெல்லி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளது. கடந்த 10ம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு நடந்தபோது கோஹ்லி அங்கிருந்தும் வாக்களிக்கவில்லை.

பெங்களூர்
ஏப்ரல் 10ம் தேதி கோஹ்லி டெல்லியில் இல்லை பெங்களூரில் இருந்தார். அவர் வாக்களிக்க விருப்பமாக தான் இருந்தார் என்று கோஹ்லியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்
வாக்களிப்பதும் வாக்களிக்காமல் இருப்பதும் இந்திய குடிமகனின் விருப்பம். ஆனால் தேர்தல் ஆணைய விளம்பர தூதுவராக இருந்து கொண்டு கோஹ்லி வாக்களிக்காதது குறித்து விசாரிக்கப்படும் என்று டெல்லி தேர்தல் அதிகாரி டாக்டர் நசிம் சையதி தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா சர்மா
கோஹ்லியின் காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் வாக்களிக்கவில்லை. அவர் வாக்குப்பதிவு நாள் அன்று ராஜஸ்தானில் படப்பிடிப்பில் பிசியாக இருந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications