மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு தொடக்கம்-பலத்த பாதுகாப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய வாக்குப் பதிவின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டசபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் மமதா பானர்ஜி போட்டியிட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு போன சுவேந்து அதிகாரி, மமதாவை எதிர்த்து போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் போது தொடர்ந்து முன்னிலை வகித்த மமதா பானர்ஜி திடீரென கடைசி நேரத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் முதல்வராக மமதா பானர்ஜி
நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு எதிராக மமதா பானர்ஜி வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றியதால் மமதா பானர்ஜி 3-வது முறையாக மேற்கு வங்க முதல்வரானார். முதல்வரான மமதா பானர்ஜி 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

பவானிப்பூர் இடைத்தேர்தல்
இதனால் மாநில அமைச்சராக இருந்த பவானிப்பூர் எம்.எல்.ஏ. சோபன்தேவ் சட்டோபாத்யா தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பவானிப்பூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் செப்டம்பர் 30 (இன்று) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக முதல்வர் மமதா பானர்ஜி, பாஜக வேட்பாளராக பிரியங்கா டிப்ரிவால், மார்க்சிஸ்ட் வேட்பாளராக ஶ்ரீஜிவ் பிஸ்வாஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் வழ்ககு
இந்நிலையில் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என அம்மாநில தலைமை செயலாளர், தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் தலைமை செயலாளர் செல்வாக்கு செலுத்தும் விதமாக கடிதம் அனுப்பியிருக்கிறார்; அதனால் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சயான் பானர்ஜி என்பவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்; ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு தலைமை செயலாளர் கடிதம் அனுப்பியது கண்டனத்துக்குரியது எனவும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

விறுவிறு வாக்குப் பதிவு
இதையடுத்து பவானிப்பூர் தொகுதியில் திட்டமிட்டபடி இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பவானிப்பூர் தொகுதியுடன் ஜாங்கிபூர், சம்கேர்கஞ்ச் ஆகிய தொகுதி இடைத்தேர்தல்களிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. பவானிப்பூர் தொகுதியில் 97 வாக்குப் பதிவு மையங்களில் 287 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய வாக்குப் பதிவின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் ஆயுதப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப் பதிவு மையங்களில் 200 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications