வாழ்த்து தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணனை அவமரியாதை செய்தாரா வெங்கையா நாயுடு? வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கையா நாயுடுவிற்கு பொன்னாடை போர்த்து வாழ்த்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேட்டி கட்டிய ஒரு தென் மாநிலத்துக்காரர் குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமையளிப்பதாக பாஜக தமிழக பிரிவு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ள நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் இந்த குட்டி வீடியோவை ஷேர் செய்துள்ளார். அது வைரலாகியுள்ளது. வெங்கையா நாயுடுவிற்கு பொன்னாடை போர்த்த முயலும்போது வேறு ஒருவர் குறுக்கிட்டு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார். அந்த நபர் பார்க்க கொஞ்சம் எம்.பி.தருண் விஜய் ஜாடையில் உள்ளார். இதனால் தாமதிக்கும் பொன்னார் மீண்டும், காத்திருந்து பொன்னாடை போர்த்துகிறார். பிறகு அங்கேயே நின்றபடி மலர் கொத்தை எடுத்து கொடுக்கிறார்.

மலர் கொத்தை வாங்கிய வெங்கையா நாயுடு, போங்க, போங்க என்பதை போல கையால் ஜாடை காட்டி ஏறத்தாழ பொன்.ராதாகிருஷ்ணனை விரட்டிவிடுவதை போல அனுப்புகிறார். பொன்.ராதாகிருஷ்ணனும் அப்படியே கிளம்பி செல்கிறார். இந்த வீடியோவை பார்த்து, சமூக வலைத்தளங்களில் பாஜக மேலிட தோரணைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பொன்னாடை

பொன்னாடை

வெங்கையா நாயுடுவிற்கு பொன். ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்த முயலும்போது வேறு ஒருவர் குறுக்கிட்டு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார். அந்த நபர் பார்க்க கொஞ்சம் எம்.பி.தருண் விஜய் சாயலில் உள்ளார்.

மலர்கொத்து

மலர்கொத்து

இதனால் தாமதிக்கும் பொன்னார் மீண்டும், காத்திருந்து பொன்னாடை போர்த்துகிறார். பிறகு அங்கேயே நின்றபடி மலர் கொத்தை எடுத்து கொடுக்கிறார்.

விரட்டிவிடுகிறாரா?

விரட்டிவிடுகிறாரா?

மலர் கொத்தை வாங்கிய வெங்கையா நாயுடு, போங்க, போங்க என்பதை போல கையால் ஜாடை காட்டி ஏறத்தாழ பொன்.ராதாகிருஷ்ணனை விரட்டிவிடுவதை போல அனுப்புகிறார். பொன்.ராதாகிருஷ்ணனும் அப்படியே கிளம்பி செல்கிறார்.

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோவை பார்த்து, சமூக வலைத்தளங்களில் பாஜக மேலிட தோரணைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொன். ராதாகிருஷ்ணனுக்கு அவமரியாதை என்கிற கருத்துகளுடன் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+