குழந்தைகளை கொடுமைப்படுத்திய கிறிஸ்தவ சேவை அமைப்பு.. போலீஸ் ரெய்டால் அம்பலம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியருகே கிரேட்டர் நொய்டா பகுதியில் சட்ட விரோதமாக 30 சிறுவர்களை அடைத்து வைத்து மதம் மாற்றிய கிறிஸ்தவ அமைப்பில் போலீசார் ரெய்டு நடத்தி, சிறுவர்களை மீட்டுள்ளனர். தாங்கள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டோம் என்று அந்த சிறுவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

கிரேட்டர் நொய்டா மற்றும் மீரட் நகரங்களில், இம்மானுவேல் சேவா குரூப் என்ற பெயரிலான கிறிஸ்தவ அமைப்பு, ஷெல்டர்கள் அமைத்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக சிறுவர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த மாதம் 29ம் தேதி போலீசார் அங்கு ரெய்டு நடத்தி 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை மீட்டுள்ளனர்.

Poor children forcibly converted to Christianity

இதுகுறித்து, மீட்கப்பட்ட 9 வயது சிறுவன் ஒருவன், ஆங்கில பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டி: அந்த இடம் ஒரு சிறை போலத்தான் இருந்தது. மாதம் ஒருமுறை மட்டுமே பெற்றோருடன் 15 நிமிடங்கள் சந்திக்க எங்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். எந்த ஒரு கல்வியும் எங்களுக்கு கிடையாது. பைபிளை மட்டுமே படிக்க நிர்பந்திக்கப்பட்டோம்.

பைபிளிலுள்ள வரிகள் ஒவ்வொன்றையும், மனப்பாடமாக படிக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தப்பட்டோம். என்றாவது பைபிளிலுள்ள வரிகளை மறந்துவிட்டாலும், அடித்து உதைப்பதோடு, 3 நாட்களுக்கு சாப்பாடே கொடுக்காமல் பட்டினிபோட்டனர்.

மேலும், எருமை மாட்டுக்கறியைதான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். நன்கொடை அளிக்கும் நபர்கள் ஷெல்டர்களுக்கு வரும்போது மட்டும் எங்களுக்கு புதுத்துணி கொடுத்து போடச்சொல்வார்கள். அவர்கள் முன்பாக நடந்து போகச்சொல்லி, பைபிளிலுள்ள வசனங்களை ஒப்பித்துக்காட்ட சொல்வார்கள்.

நன்கொடையாளர்கள் சென்றதும், ஷெல்டர் பொறுப்பாளர்கள் எங்கள் ஆடைகளையும், தின்பண்டங்களையும் பறித்துச் சென்றுவிடுவார்கள். இவ்வாறு சிறுவன் கூறியுள்ளார். அச்சிறுவனின் 11 வயது சகோதரி கூறுகையில், "கடும் குளிரிலும் கூட மோசமான வெறும் தரையில்தான் எங்களை படுக்க வைத்து கொடுமைப்படுத்தினர்" என்று தெரிவித்துள்ளார்.

ஏழ்மை நிலையிலுள்ள, சிறுவனின் பெற்றோர் கூறுகையில், 3 வருடங்கள் முன்பு, அந்த கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி, எங்களை ஒரு ஆஸ்பத்திரியில் வைத்து சந்தித்தார். இரு குழந்தைகளையும் தாங்களே வளர்த்துக்கொள்வதாகவும், அவர்களை ஐஏஎஸ் ஆக்கிகாட்டுவதாகவும் கூறியதை நம்பி, குழந்தைகளை அனுப்பி வைத்தோம். கிறிஸ்தவ போதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வீதி வீதியாக கொடுக்குமாறு அந்த அமைப்பினர் எங்களிடம் தெரிவித்தனர். நாங்களும் செய்தோம். ஆனால், எங்களுக்கு அதற்காக காசு தரப்படவில்லை.

போலீசார் எனது குழந்தைகளை மீட்ட நிலையில், இமானுவேல் அமைப்பில் இருந்து சில ரவுடிகள் வந்து, குழந்தைகளை மீண்டும் எங்களிடம் தராவேண்டும் என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நன்கொடையை பெறுவதற்காக சிறுவர்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவர்களாக மாற்றி, பைபிள் ஒப்பிக்க வைத்து, கணக்கு காட்டி காசு சம்பாதித்து வந்துள்ளது அந்த அமைப்பு என்று தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+