இந்த இன்டர்நெட் காலத்திலும் "புக்" வாங்கிப் படித்து புளகாங்கிதமடையும் "ஆ" பிரியர்கள்!
கொல்கத்தா: இந்த இன்டர்நெட் காலத்திலும் கூட ஆபாசப் புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை என்று கூறுகிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு புத்தக வியாபாரி. கொல்கத்தா என்று இல்லை, எல்லா ஊர்களிலுமே ஆபாசப் புத்தகம் படிப்போர் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை என்பதே உண்மை.
முன்பு போல இப்போது இல்லை. இன்டர்நெட்டில் ஆபாசங்கள் கொட்டிக் கிடக்கின்றன. புத்தகங்களில் கிடைப்பதை விட பல மடங்கு ஆபாசம் இன்டர்நெட்டில் உள்ளது. படம், கதை, வீடியோ என ஆபாசத்திற்கு எல்லையே இல்லை. ஆனாலும் இன்னும் புத்தகம் வாங்கிப் படிப்பதை பலர் விரும்புகிறார்களாம்.
கொல்கத்தாவின் லெனின் சதுக்கப் பகுதியில் புத்தகக் கடை வைத்திருப்பவர் முர்ஷாத் அலி. இவர் ஆபாசப் புத்தகங்களை விற்பவர். இவரது வாடிக்கையாளர்கள் எக்கச்சக்கம். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இவரிடம் புத்கம் வாங்கி வருகிறார்களாம். வாடிக்கையாளர் எண்ணிக்கையில் ஒரு குறைவும் இல்லை என்கிறார் அலி.

விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் ஒருவர்
கொல்கத்தாவில் எரோட்டிகா வகை புத்தகங்களை விற்கும் வெகு சிலரில் அலியும் ஒருவர். இவரிடம் கிடைக்காக எரோட்டிகா புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம். லோக்கல் பெங்காலி புத்தகம் முதல் சர்வதேச அளவிலான ஆங்கிலப் புத்தகங்கள் வரை எல்லாமே இவரிடம் கிடைக்கும். இதற்காகவே இவரிடம் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.

புத்தகத்திற்கு மவுசு குறையவில்லை
இன்டர்நெட் வந்தாலும், எலக்ட்ரானிக் மீடியா விஸ்வரூபம் எடுத்திருந்தாலும் கூட புத்தகம் வாங்கிப் படிப்போரிடம் அந்த மவுசு இன்னும் குறையாமல் இருப்பதாக கூறுகிறார் அலி. தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையாமல் இருப்பதே இதற்கு சான்று என்று கூறுகிறார் அலி. மேலும் தனக்கு புதிது புதிதாக வாடிக்கையாளர்கள் கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார்.

23 டூ 45 வரை
73 வயதாகும் இவரிடம் உள்ள வாடிக்கையாளர்களில் 23 முதல் 45 வயது வரையிலானோர் உள்ளனர். ஆண்கள் மட்டும் அல்லாது பெண்களும் கூட வாடிக்கையாளர்களாக உள்ளனராம். இதுகுறித்து பெருமையுடன் கூறுகிறார் அலி. புத்தகம் படிப்பது சுவாரஸ்யமானது என்பதால் பலரும் அதைத் தொடர்வதாக கூறுகிறார் அலி.

புத்தகம் படிப்பதே சுவாரஸ்யம்தான்
இதுகுறித்து அலி கூறுகையில், இப்போது கையில் உள்ள செல்போனிலேயே எல்லாவற்றையும் பார்த்து விடலாம். ஏன் புத்தகத்தையே கூட செல்போனில் படித்து விடலாம். ஆனால் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பக்கத்தைத் திருப்பிப் படிப்பது தனி சுகமானது, சுவாரஸ்யமானது என்று கூறுகிறார் அலி.

புத்தகத்திற்கு ஈடு இணையில்லை
எலக்ட்ரானிக் மீடியா நிச்சயம் வாசிப்புப் பழக்கத்திற்கு பெரிய எதிரிதான். ஆனால் புத்தகத்திற்கு உள்ள மவுசு இன்னும் குறையவில்லை. அது எந்த மாதிரியான புத்தகமாக இருந்தாலும் சரி, புத்தக விற்பனையில் சரிவு என்பது நிச்சயம் இல்லை. புத்தகத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

பலபல வருட அனுபவம்
நான் பல வருடமாக இதை விற்று வருகிறேன். எப்போது முதல் இதை விற்கிறேன் என்று எனக்கு சரியாக நினைவில்லை. பல காலமாக விற்கிறேன். இதுபோன்ற புத்தகங்களைப் படிப்பதற்காக தனி வட்டமே உள்ளது. அவர்கள் விரும்பும் புத்தகங்களையும், பிற புத்தகங்களையும் நான் தனியாக பிரித்து வைத்து விற்பேன் என்றார் அலி.

40 வயதுக்காரரின் அனுபவம்
இவரிடம் கடந்த 90களிலிருந்து ஒருவர் புத்தகம் வாங்கி வருகிறாராம். அவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனராம். இருந்தாலும் புத்தகம் வாங்குவதை நிறுத்தவில்லையாம். இதுகுறித்து ராபின் என்ற அவர் கூறுகையில், நான் இதற்கு அடிமை. இதைப் படிக்காவிட்டால் எனக்குத் தூக்கம் வராது. இதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. தனியார் வங்கியில் நான் மேலாளராக இருக்கிறேன். ஆனாலும் இதைப் படிக்க நான் வெட்கப்படவில்லை. வார இறுதியில் இங்கு வருவேன். லேட்டஸ்ட் பெங்காலி புத்தகங்களை வாங்கிச் செல்வேன் என்று கூறுகிறார் ராபின்.

மனைவிக்குத் தெரியாமல்
ராபின் மேலும் கூறுகையில் நான் இந்த புத்தகம் படிப்பது எனது மனைவிக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியாமல்தான் படிக்கிறேன். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இளம் வயதில் இதைச் செய்ய முடியாத நிலை இருந்தது. வளர்ந்து பெரியவன் ஆனதும் நானே வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். இப்போதும் இதைத் தொடர்கிறேன். இதை நிறுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை என்றார் ராபின்.

கொல்கத்தாவில் மட்டுமா!
கொல்கத்தாவில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த எரோட்டிகா புத்தக விற்பனை இன்னும் கொடி கட்டிப் பறந்து கொண்டுதான் உள்ளது. புத்தகங்கள் இன்னும் விறுவிறுப்பான விற்பனையில் இருக்கத்தான் செய்கின்றன. பல வகையான இலக்கியத்தின் வரிசையில் இந்த எரோட்டிகா இலக்கியமும் தொய்வின்றி பீடு நடை போட்டுக் கொண்டுதான் உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications