பி.எஸ்.எப் பயிற்சி வகுப்பில் ப்ளூ பிலிம்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்
எல்லை பாதுகாப்பு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அதிகாரி ஒருவர் வழங்கவிருந்த செயல்விளக்க வீடியோவில் ஆபாச வீடியோ வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப்: எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி வீடியோவை ஒளிபரப்பு முயன்ற போது தவறுதலாக ஆபாச வீடியோ வெளியானதால் அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய எல்லையை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த தீவிரவாதிகளோ, மற்ற நாட்டினரோ அத்துமீறி நுழையாத அரணாக உள்ளவர்கள் எல்லை பாதுகாப்பு படையினர். இதில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பணியாற்றி வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் வீரர்களும், வீராங்கனைகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவர்களுக்கு ஆண்டுதோறும் செயல்விளக்க வீடியோ மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆண், பெண் வீரர்கள் குவிந்தனர்
இதனிடையே, பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள முகாமில் 77ஆவது பட்டாலியன் படையைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான சனிக்கிழமை அனைவரும் ஓரிடத்தில் திரண்டனர். அப்போது உயரதிகாரிகள் வந்திருந்தனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகள்
அப்போது பயிற்சியை ஸ்லைடுகளாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வீரர்கள், வீராங்கனைகள் ஆயத்தமாகினர். அப்போது வீடியோ வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஆபாச வீடியோ
ஒரு அதிகாரியின் லேப்டாப்பில் இருந்து அந்த பயிற்சி செயல்விளக்க வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது தவறுவதாக ஆபாச வீடியோ வெளியானது.
இந்த வீடியோ ஒளிபரப்பான சுமார் 10 முதல் 15 நொடிகளுக்கு பிறகே அந்த அதிகாரி சுதாரித்து கொண்டார்.

அவசர அவசரமாக நிறுத்தம்
இதைத் தொடர்ந்து அந்த வீடியோவை அவசர அவசரமாக நிறுத்தினர். இது உயரதிகாரிகளின் காதுகளுக்கு எட்டியது. என்னதான் தவறுதலாக நடந்திருந்தாலும், ஒரு பயிற்சி வீடியோ தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி இத்தனை கவனக்குறைவாக இருந்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது.

பிஎஸ்எஃப் விளக்கம்
இதுதொடர்பாக டிஜிபியும், பஞ்சாப் எல்லை பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளருமான ஆர்.எஸ்.கட்டாரியா வெளியிட்ட விளக்கத்தில், எல்லை பாதுகாப்பு படையானது மிகவும் உயர் ஒழுக்கம் கொண்ட படையாகும். இதுபோன்ற நிகழ்வுகளால் ஒழுக்கம் பாதிக்கப்படும். இதை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications