3,000 ஆபாச வீடியோக்கள்-ஜெர்மனி டூரில் பிஸியாம்! விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் கேட்ட பிரஜ்வால்!
ஹாசன்: 3,000 ஆபாச வீடியோக்கள் தொடர்பான விசாரணைக்கு எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா.
ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. 300 பெண்களை நாசமாக்கி 3,000-க்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை பிரஜ்வல் ரேவண்ணா பதிவு செய்திருந்தார். இந்த வீடியோக்கள் அவரது ஓட்டுநர் கார்த்திக் மூலம் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டது. இந்த வீடியோக்களை வைத்து ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என உள்ளூர் பாஜகவினர் மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பினர். ஆனாலும் ஜேடிஎஸ்- பாஜக கூட்டணி அமைந்தது.

இந்த நிலையில் ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவுக்கு முன்னதாக பென் டிரைவ்கள் மூலம் 3,000-க்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் பரவின. ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவின் இந்த் ஆபாச வீடியோக்கள் கர்நாடகாவை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இது தொடர்பாக எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவை விட்டே தப்பி ஓடிவிட்டார்.
தற்போது பிரஜ்வல் வீடியோக்களை வெளியிட்டது யார்? பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு தப்பி ஓடவிட்டது யார்? என சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பிரஜ்வல் ரேவண்ணா எம்பி என்பதால் வழங்கப்பட்ட தூதரக பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே ஹாசனில் முகாமிட்டுள்ள எஸ்.ஐ.டி. அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்து வருகின்றனர். சில பெண்கள், எங்களை விசாரித்தால் தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
இதனிடையே சமூக வலைதளப் பக்கங்களில் தம் மீது எந்த தவறும் இல்லை என பிரஜ்வல் ரேவண்ணா நேற்று பதிவிட்டிருந்தார். அத்துடன் அவரது வழக்கறிஞர் போலீசார் முன்னிலையில் ஆஜராகி, ஜெர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளா பிரஜ்வல். இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் தர வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் இதனை எஸ்.ஐ.டி ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
-
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
டிகே சிவக்குமார் சொன்ன வார்த்தை.. முதல்வர் விஜய் இப்போதாவது வாய் திறப்பாரா? பாய்ந்து வந்த கேஎன் நேரு -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
தண்ணீருக்கு பதிலாக டீசல்.. மங்களூர் கிணற்றில் இரைக்க இரைக்க வந்த எரிபொருள்? கடைசியில் ட்விஸ்ட் -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications