நடிகை ப்ரீத்தி ஜிந்தா பொய் புகார் கொடுத்துள்ளார்: மும்பை போலீஸுக்கு நெஸ் வாடியா கடிதம்

கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது தனது முன்னாள் காதலரும், தொழில் அதிபருமான நெஸ் வாடியா தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, மிரட்டி, கண்ட இடத்தில் தொட்டதாக ப்ரீத்தி மும்பை போலீசில் புகார் கொடுத்ததுடன் வாக்குமூலமும் அளித்தார். மேலும் கடந்த திங்கட்கிழமை அவர் மும்பை நகர போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் நெஸ் வாடியா மும்பை போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
ப்ரீத்தி ஜிந்தா என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார். நான் அவரை மிரட்டவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நான் கூறும் 9 சாட்சியங்களை விசாரித்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
3 சாட்சியங்கள் ப்ரீத்தி ஜிந்தா கூறியதை போலவே நெஸ் வாடியா அவரை தாக்கி, மிரட்டியதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பஞ்சாப் அணி அதிகாரி ஒருவர் மட்டும் நடந்ததை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். சீட் விஷயமாக அவர்கள் விவாதித்தனர். ஆனால் நெஸ் ப்ரீத்தியிடம் தவறாக நடந்ததை தான் பார்க்கவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்டேடியத்தில் ப்ரீத்தியின் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய 48 மணிநேரத்தில் நெஸ்ஸிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நெஸ் போலீசாருக்கு சாட்சியங்கள் 9 பேரின் பெயர்களை எழுதி அவர்களிடம் விசாரிக்குமாறு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications